முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தி.மலை அண்ணாமலையார் கோவிலில் இந்த ஆண்டு தீபத்திருவிழா மிகவும் சிறப்பாக நடைபெறும்: அமைச்சர் சேவூர் எஸ்.இராமச்சந்திரன் பேட்டி

வெள்ளிக்கிழமை, 27 அக்டோபர் 2017      திருவண்ணாமலை

 

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் இந்த ஆண்டு நடைபெறும் கார்த்திகை தீபத்திருவிழா மிகவும் சிறப்பாக நடைபெறும் என தமிழக இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேவூர் எஸ்.இராமச்சந்திரன் கூறினார்.
 

தீபத்திருவிழா

திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேசுவரர் திருக்கோயில் திருக்கார்த்திகை தீபத்திருவிழாவை முன்னிட்டு மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் கோயில் இணை ஆணையர் அலுவலகத்தில் தமிழக இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேவூர் எஸ்.இராமச்சந்திரன் தலைமையில் நேற்று நடைபெற்றது.
இந்த கூட்டத்தில், மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமி, இந்து சமய அறநிலையத் துறை ஆணையர் ஜெயா, கூடுதல் ஆணையர் (பொது) .திருமகள், மாவட்ட வருவாய் அலுவலர் பொ.இரத்தினசாமி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் .லோகநாயகி, கோயில் இணை ஆணையர் இரா.ஜெகன்னாதன், தி.மலை கோட்டாட்சியர் உமாமகேஸ்வரி, முன்னாள் அமைச்சர்கள் எஸ்.இராமச்சந்திரன், அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி, முன்னாள் வணிகவரி ஆலோசனைக் குழு உறுப்பினர் பெருமாள் நகர் கே.ராஜன், தாசில்தார் ஆர்.ரவி, திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் புருஷோத்குமார், தனி அலுவலர் கருணாகரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதனை தொடர்ந்து, அமைச்சர் கோயில் வளாகத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் குறித்து நேரில் ஆய்வு செய்தார்.
மேலும், திருவண்ணாமலை அருள்மிகு அருணாச்சலேசுவரர் திருக்கோயில் கிரிவலம் வரும் பக்தர்களின் வசதிக்காக ஈசான்ய லிங்கம் கோயில் அருகில் அண்ணாமலையார் திருக்கோயில் வைப்பு நிதியிலிருந்து பொதுப்பணித்துறை (கட்டடங்கள்) மூலமாக 3.76 ஏக்கர் நிலப்பரிப்பில் ரூ.28 கோடி மதிப்பீட்டில் யாத்ரி நிவாஸ் கட்டப்படவுள்ள இடத்தினை அமைச்சர் நேரில் ஆய்வு செய்தார்.
இந்த யாத்ரி நிவாஸில் பக்தர்கள் தங்கும் அறைகள், குடில்கள், உணவகம், வாகன ஓட்டுனர்கள் தங்கும் அறைகள், சலவை, குடிநீர், கழிவறை உட்பட அனைத்து அடிப்படை வசதிகள் மற்றும் சிறிய கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் ஆகியவை கட்டப்படவுள்ளது. மேலும், இந்த யாத்ரி நிவாஸ் கட்டடம் சிவலிங்கம் வடிவில் அமைக்கப்பட உள்ளது சிறப்பம்சமாகும்.
அமைச்சர் சேவூர் எஸ்.இராமச்சந்திரன் செய்தியாளர்களுக்கு அளித்தபேட்டியில், உலக பிரசித்தி பெற்ற அருள்மிகு அருணாசலேசுரர் திருக்கோயில் திருக்கார்த்திகை தீபத்திருவிழா வரும் டிசம்பர் 2ந் தேதி விடியற்காலை 4 மணியளவில் கோவிலில் பரண தீபமும், மாலை 6 மணியளவில் கோவில் பின்புறமுள்ள மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்படும் நிகழ்ச்சி நடைபெறும்.
இந்நிகழ்ச்சிக்கு வருகை புரியும் லட்சக்கணக்கான பக்தர்களின் வசதிக்காக மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள், அடிப்படை வசதிகள் குறித்து விரிவான ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. தீபத்திருவிழாவினை சிறப்பாக நடத்துவதற்கு என்ன தேவைகள் என்பது குறித்து ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு திருக்கார்த்திகை தீபத்திருவிழா மிகவும் சிறப்பாக நடைபெறும்என்றார்.
மேலும், திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் அருள்மிகு அருணாசலேசுவரர் திருக்கோயில் திருக்கார்த்திகை தீபத்திருவிழா அனைத்து துறை அலுவலர்களுடன் கலந்தாய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் கே.எஸ். கந்தசாமி தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில், இந்து சமய அறநிலையத் துறை ஆணையர் ஜெயா, கூடுதல் ஆணையர் (பொது) .திருமகள், மாவட்ட வருவாய் அலுவலர் பொ.இரத்தினசாமி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் .லோகநாயகி, கோயில் இணை ஆணையர் இரா.ஜெகன்னாதன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) ஜானகி, துணை ஆட்சியர் (பயிற்சி) சுரேஷ் மற்றும் அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து