முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

எனது போராட்டத்தால் புதிய கேஜ்ரிவால்கள் உருவாக மாட்டார்கள்: அண்ணா ஹசாரே

புதன்கிழமை, 13 டிசம்பர் 2017      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி: டெல்லியில் நான் நடத்தும் போராட்டத்தால் கேஜ்ரிவால் போன்றவர்கள் மீண்டும் உருவாக மாட்டார்கள் என சமூக ஆர்வலர் அண்ணா ஹசாரே நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

ஊழலை ஒழிப்பதற்கு ஜன் லோக்பால் அமைக்க வேண்டும் என அண்ணா ஹசாரே கடந்த 2011-ல் 12 நாள் உண்ணாவிரதம் மேற்கொண்டார். அப்போதைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு கொள்கை அளவில் அவரது கோரிக்கையை ஏற்றுக் கொண்டது. ஆனால் லோக்பால் அமைப்பு உருவாக்கப்படவில்லை.

முதலாளித்துவ அரசுகள் நமக்கு வேண்டாம். நரேந்திர மோடி, ராகுல் காந்தி வேண்டாம். விவசாயிகளின் நலனில் அக்கறை கொண்ட அரசு தான் நமக்கு தேவை’’  --அண்ணா ஹசாரே --

ஊழலுக்கு எதிரான இயக்கத்தில் அண்ணா ஹசாரேவுடன் இருந்த அரவிந்த் கேஜ்ரிவால் பின்னர் தனியாக பிரிந்து ஆம் ஆத்மி அரசியல் கட்சியை உருவாக்கினார். டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட்டு வென்று முதல்வரானார்.

இந்நிலையில், ஜன் லோக்பால், விவசாயிகள் பிரச்சினை, தேர்தல் சீர்திருத்தம் ஆகியவற்றை வலியுறுத்தி டெல்லியில் மீண்டும் போராட்டம் நடத்தப்போவாதக அண்ணா ஹசாரே அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக ஆக்ராவில்  விவசாயிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் அண்ணா ஹசாரே கலந்து கொண்டு பேசியதாவது:
"ஜன் லோக்பால் மற்றும் விவசாயிகள் பிரச்சினையை முன்னிறுத்தி டெல்லியில் மார்ச் 23ம் தேதி பெரிய அளவில் போராட்டம் நடைபெறுகிறது. இதில் விவசாயிகள் அதிகஅளவில் பங்கேற்க வேண்டும். எனது போராட்டத்தின் மூலம் கேஜ்ரிவால் போன்றவர்கள் மீண்டும் உருவாகமாட்டார்கள் என நம்புகிறேன்.

முந்தைய காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு ஜன் லோக்பால் சட்டத்தை கொண்டுவரவில்லை. ஆனால் தற்போதைய பாஜக அரசோ, ஜன் லோக்பால் சட்டத்தின் வீரியத்தை குறைத்து நீர்த்துப்போகச் செய்து விட்டது. 70 ஆண்டுகால சுதந்திர இந்தியாவில் ஜனநாயகம் உண்மையான வடிவில் அமையவில்லை.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 11 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 1 month ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 1 month ago
View all comments

வாசகர் கருத்து