முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

குளிர்கால சரும பராமரிப்பு முறைகள்

திங்கட்கிழமை, 25 டிசம்பர் 2017      வாழ்வியல் பூமி
Image Unavailable

Source: provided

குளிர் காலத்தில் சருமம், முடி போன்றவை வெகுவாக பாதிக்கப்படுகின்றன. சரும ஆரோக்கியம் என்பது வெளிப்புறத்தில் மேற்கொள்ளப்படும் சிகிச்சை மட்டுமல்ல; நாம் உண்ணக் கூடிய உணவையும் பொருத்தது. முறையான ஊட்டச்சத்தான உணவு, சருமம் ஆரோக்கியமாக இருக்க உதவுகிறது. குறிப்பாக, சருமத்தின் ஈரப்பதத்தை பராமரிப்பதில் நீருக்கு முக்கிய பங்கு உள்ளது. தினமும் உணவில், அதிக அளவில் பழங்கள் காய்கறிகள் சேர்த்துக்கொள்வது அவசியம்.

குளிர் அதிகமாக உள்ள நேரத்தில், வெளியே செல்லும்போது, வெம்மையாடைகளை அணியவேண்டும். குளிருக்கு இதமாக அதிக நேரம் நெருப்புக்கு அருகில் இருந்தால், உடலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். குளிர் காலத்தில் சருமத்தின் மென்மை மற்றும் நெகிழ்வுத்தன்மையை பராமரிக்க, சோப்புக்கு பதிலாக கடலை மாவை பயன்படுத்தலாம்.

தோல் வறண்டு போகுதல் மற்றும் தோல் வெடிப்பதை தவிர்க்க, குளிக்க செல்வதற்கு சிறிது நேரத்திற்கு முன், தேங்காய் எண்ணையை உடலில் தேய்க்கலாம். குளித்து முடித்தவுடன் மாய்ச்சரைசர்கள், கிரீம்கள் தடவ வேண்டியது அவசியம். குளிக்க பயன்படுத்தும் நீரில், சில துளிகள் தேங்காய் எண்ணையைச் சேர்க்கலாம். குளிப்பதால் ஏற்படக்கூடிய ஈரப்பதம், எண்ணெய் பசை இழப்பை ஈடு செய்ய உதவும். மிகவும் சூடான நீரில் குளிக்கும் போது உடலின் இயற்கையான எண்ணெய் பசை குறைந்துவிடும்.

குளிர் காலத்தில், பலருக்கும் ஏற்படும் மற்றொரு பிரச்னை உதடு வெடிப்பு. இதற்கு, உதடு வெடிப்பிற்கான எண்ணெய் அல்லது வெண்ணையை உதட்டில் தடவ லம். அதனால், வெடிப்பு குணமாவதுடன், உதட்டுக்கு கூடுதல் மென்மை கிடைக்கும். வறட்டு சருமம் உள்ளவர்கள் தினமும் குளிக்கச் செல்லும் முன் சிறிது தயிரை உடம்பில் தடவி தொடர்ந்து வெதுவெதுப்பான நீரில் குளித்து வந்தால் நிவாரணம் கிடைக்கும்.

குளிர் காலத்தில் கடுகு எண்ணெய் தேய்த்து வெதுவெதுப்பான நீரில் குளித்தல், வறட்டு சருமம் சருமம் சரியாகும். குளிருக்கும் இதமாக இருப்பதுடன் எண்ணெய் வாசனையும் அடிக்காது. அதே வேளையில், குளிர்ந்த நீரில் குளிக்கவே கூடாது. தோலில் சுரக்கும் திரவங்களால், தோல் மென்மையாகவும், ஈரப்பசையுடனும் உள்ளது. ஆனால், குளிர்காலத்தில் ஈரப்பசை குறைவதாலும், உடலில் ஏற்படும் மாற்றத்தாலும், தோல் வறண்டுவிடும்; சிலருக்கு தோல் சொர சொரவென இருக்கும்.

தோல் வறட்சி உள்ளவர்கள், அடிக்கடி நீரில் உடலை கழுவக் கூடாது, அடிக்கடி கழுவினால், ஏற்கனவே குறைவாகவுள்ள ஈரப்பசை மேலும் குறைந்து விடும். சோப்பு போட்டு குளித்தல் இன்னும் அதிகமாக வறட்சி ஏற்படும். எனவே, சோப்புக்கு மாற்றாக கடலை மாவை பயன்படுத்தலாம்.

மிதமான சூட்டிலுள்ள நீரில் குளிப்பது வறட்சியான தோலுக்கு இதமானது. இயல்பாகவே வறண்ட தோலுள்ளவர்கள், குளிர் காலத்தில் வறட்சி பிரச்னைக்கு உள்ளாகுவோர், இதற்கென உள்ள பிரத்யேகமான கிரீம்களை பயன்படுத்தலாம். பாரபின் எண்ணெய், வாசலின் பயன்படுத்தலாம். மாலையில் குளிர்ச்சியான நேரத்தில் காலுறைகளை தவறாமல் அணிதல், வெடிப்பின் தன்மையைக் குறைக்கும். அதுபோல் செருப்புக்கு பதிலாக கட்ஷு போன்றவற்றை அணியலாம். உணவில் தயிர், முட்டை, மீன், நல்லெண்ணெய் ஆகியவை அதிகளவில் பயன்படுத்தவேண்டும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து