முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கடலூர் ரயில் விபத்துக்கு கேட் கீப்பரின் அலட்சியமே காரணம் : விசாரணையில் தகவல்

சனிக்கிழமை, 12 ஜூலை 2025      தமிழகம்
Cuddalore-train-accident

Source: provided

கடலூர் : கடலூர் ரயில் விபத்துக்கு கேட் கீப்பரின் அலட்சியமே காரணம் என விசாரணையில் தெரியவந்துள்ளது.

கடலூர் மாவட்டம் செம்மங்குப்பத்தில் ஜூலை 8 ஆம் தேதி ரயில்வே கேட்டை கடக்க முயன்ற பள்ளி வேன் மீது ரயில் மோதிய விபத்தில் 3 மாணவர்கள் பலியாகினர். இந்த விபத்தில் கவனக்குறைவாக செயல்பட்டதாகக் கூறி, செம்மங்குப்பம் கேட் கீப்பர் பங்கஜ் சர்மா உடனடியாக கைது செய்யப்பட்டார். ரயில் வரும்போது அவர் கேட்டை மூடவில்லை என்று கூறப்பட்டது.

இதுதொடர்பாக பங்கஜ் சர்மா, தனியார் பள்ளி ஓட்டுநர் சங்கர், லோகோ பைலட் சக்தி குமார், உதவி லோகோ பைலட் ரஞ்சித் குமார், ரயில் நிலைய அதிகாரிகள் என 13 பேருக்கு சம்மன் அனுப்பப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்ட நிலையில் விபத்துக்கு கேட்  காரணம் என்று தெரியவந்துள்ளது.

ரயில்வே கேட்டை மூடாமலேயே, கேட்டை மூடிவிட்டேன் என்று கேட் கீப்பர் பங்கஜ் சர்மா, ஸ்டேஷன் மாஸ்டருக்கு தகவல் கொடுத்துள்ளார். ஆனால் விபத்து நடந்தபின்னர் பங்கஜ் சர்மாவே, ஸ்டேஷன் மாஸ்டரை அழைத்து, விபத்து நடந்துள்ளதைக் கூறியுள்ளார். மேலும் தான் கேட்டை மூடவில்லை, தவறான தகவல் அளித்துவிட்டேன் என்றும் மாஸ்டரிடம் தெரிவித்துள்ளார். 

முன்னதாக, வேன் டிரைவர்தான் கேட்டை திறக்கச் சொன்னதாக ரயில்வே, முன்னுக்குப்பின் முரணாக அறிக்கை வெளியிட்டிருந்தது. தற்போது விசாரணையின் மூலமாக கேட் கீப்பர்தான் இந்த விபத்துக்குக் காரணம் என்று தெரியவந்துள்ளது. மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த பங்கஜ் சர்மா மீது ஏற்கெனவே கொலை உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் 5 வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து