முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

யாராலும் பிடிக்க முடியாத தூரத்தில் தி.மு.க.: உதயநிதி பெருமிதம்

ஞாயிற்றுக்கிழமை, 13 ஜூலை 2025      தமிழகம்
Udayanidhi-1 2023-10-1

Source: provided

திருவண்ணாமலை : தேர்தல் ரேசில் யாராலும் பிடிக்க முடியாத தூரத்தில் முதலிடத்தில் சென்று கொண்டு இருக்கிறோம் என்று துணை முதல்வர் உதயநிதி கூறி உள்ளார்.

திருவண்ணாமலையில் தி.மு.க., பாக முகவர்கள் கூட்டத்தில் அவர் கலந்து கொண்டார். அப்போது உதயநிதி பேசியதாவது;

தமிழகத்தில் திராவிட மாடல் ஆட்சி அமைந்தவுடனே முதல்வர் கையெழுத்திட்டது மகளிருக்கான விடியல் பயணத்திட்டம் தான். இந்த திட்டங்களினால் 4 மாதங்களில் மட்டும் 730 கோடி பயணங்களை மகளிர் மேற்கொண்டு இருக்கின்றனர்.   புதுமைப்பெண் திட்டம். 8 லட்சம் பேர் இந்த திட்டத்தில் பயன்பெற்றுள்ளனர். முதல்வர் காலை உணவுத் திட்டத்தில் நல்ல தரமான உணவு வழங்கப்படுகிறது.  இந்தியாவே திரும்பி பார்க்க வைக்கும் திட்டம் மகளிர் உரிமைத் தொகை திட்டம். 22 மாதங்களாக 1. 15 கோடி பேர் மாதம் தோறும் மகளிர் உரிமைத் தொகையை பெற்றுள்ளனர்.  

இந்த திட்டங்கள் பெரியளவில் தமிழகத்தில் வரவேற்பை பெற்றுள்ளதால் மத்திய அரசு தமிழகத்துக்கு, தமிழக மக்களுக்கு தொடர்ந்து தொந்தரவு கொடுத்து வருகிறது. புதிய கல்விக் கொள்கை என்ற குறுக்கு வழி மூலம் ஹிந்தியை தமிழகத்தில் நுழைக்க பார்க்கின்றனர். மறு சீரமைப்பு என்று கூறி லோக்சபா தொகுதிகளை குறைக்க பார்க்கின்றனர்.

தமிழகத்தின் நிதி உரிமையை பறிக்கும் வேலைகளை மத்திய அரசு தொடர்ந்து செய்து வருகிறது. தேர்தல் ரேசில் யாராலும் பிடிக்க முடியாத தூரத்தில் முதலிடத்தில் சென்று கொண்டு இருக்கிறோம். அடிமை அ.தி.மு.க., பா.ஜ., ஆட்சி தமிழகத்தில் வரக்கூடாது என்ற பிரசாரத்தை மக்களிடம் கொண்டு போய் சேருங்கள்.

தமிழகத்தில் பாஜ.,வுக்கு பாதை போட்டுக் கொடுக்கலாம் என்று பார்க்கிறீர்கள். தமிழக மக்கள் என்றைக்கும் அதை அனுமதிக்க மாட்டார்கள். தமிழக மக்கள் ஓரணியில் நின்றுகொண்டு அடிமைகளையும், பாசிசத்தையும் வீழ்த்த போவது உறுதி.

இவ்வாறு உதயநிதி பேசினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 9 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 11 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 11 months ago
View all comments

வாசகர் கருத்து