முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தி.மலை மாவட்டத்தில் 1439 பயனாளிகளுக்கு ரூ. 8.42 கோடி மதிப்பில் தங்க நாணயம் - நிதியுதவி: அமைச்சர் சேவூர் இராமச்சந்திரன் வழங்கினார்

ஞாயிற்றுக்கிழமை, 7 ஜனவரி 2018      திருவண்ணாமலை

 

திருவண்ணாமலை மாவட்டத்தில் சமூக நலத்துறை சார்பில் 1439 பயனாளிகளுக்கு ரூ. 8 கோடியே 42 லட்சத்து 44 ஆயிரத்து 869 மதிப்பில் தங்க நாணயம் மற்றும் நிதியுதவியினை அமைச்சர் சேவூர் எஸ்.இராமச்சந்திரன் வழங்கினார்.

திருமண நிதியுதவி

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம், கலசபாக்கம், கீழ்பென்னாத்தூர், போளூர், புதுப்பாளையம், தண்டராம்பட்டு, துரிஞ்சாபுரம், திருவண்ணாமலை, ஜவ்வாதுமலை உள்ளிட்ட 9 ஊராட்சி ஒன்றியங்களில் சமூக நலத்துறை சார்பில் 2017-18ஆம் ஆண்டு அனைத்து திருமண நிதியுதவி திட்டத்தின்கீழ் 1439 பயனாளிக்கு (8 கிராம்) தங்க நாணயம் மற்றும் நிதியுதவி வழங்கும் விழா நேற்று நடைபெற்றது. இவ்விழாவுக்கு ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமி தலைமை தாங்கினார்.

ஆர்.வனரோஜா எம்பி, வி.பன்னீர்செல்வம் எம்எல்ஏ ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் தமிழக இந்துது சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் எஸ்.இராமச்சந்திரன் கலந்து கொண்டு 1439 பயனாளிகளுக்கு ரூ. 4 கோடியே 91 லட்சத்து 75 ஆயிரம் மதிப்பில் நிதியுதவியும், ரூ. 3 கோடியே 50 லட்சத்து 69 ஆயிரத்து 869 மதிப்பில் தங்க நாணயமும் மொத்தம் ரூ. 8 கோடியே 42 லட்சத்து 44 ஆயிரத்து 869 மதிப்பில் நலத்திட்ட உதவிகளை வழங்கி புதியதாக கட்டப்பட்டுள்ள பல்வேறு கட்டிடங்களையும் திறந்து வைத்தார்.

விழாவில் மாவட்ட வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் க.லோகநாயகி, அதிமுக மாவட்ட துணை செயலாளர் மாதிமங்கலம் துரை, ஒன்றிய செயலாளர்கள் திருநாவுக்கரசு, எல்.புருஷோத்தமன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் (கி.ஊ.), ஆர்.ஆனந்தன், எஸ்.நாகேஷ்குமார், ஆணையாளர் என்.பாண்டியன், ஏ.எஸ்.குமார் மற்றும் அரசுத்துறை அலுவலர்கள், முன்னாள் உள்ளாட்சி பிரதிநிதிகள், கூட்டுறவு சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 11 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 1 month ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 1 month ago
View all comments

வாசகர் கருத்து