கமல் ஒரு மரபணு மாற்றப்பட்ட விதை தமிழகத்தில் நாம் விதைப்பதில்லை: அமைச்சர் ஜெயக்குமார் பதிலடி

புதன்கிழமை, 21 பெப்ரவரி 2018      அரசியல்
jayakumar(N)

சென்னை, கமல் தான் காகிதப்பூவல்ல , விதை என்ற கூறியிருந்த நிலையில், கமல் மரபணு மாற்றப்பட்ட விதை அது யாருக்கும் பயன்தராது, பொதுவாக தமிழகத்தில் நாம் விதைப்பதில்லை என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.

மீனவர்களை நடத்தும் விதத்திலேயே தெரிகிறது கமலுக்கு தலைமை பண்பு இல்லை. நிர்வாகத் திறனும் இல்லை. காலை 7.30 மணிக்கு பள்ளிக் கூடத்துக்கு சென்ற ஒரே நபர் கமல்தான். - ஜெயக்குமார்

கமலஹாசன் தமிழக அரசை விமர்சிக்கத் தொடங்கிய நாள் முதல் அவரை கடுமையாக விமர்சித்து வருபவர் அமைச்சர் ஜெயக்குமார். கமலஹாசன் அரசியலுக்கு வருவேன் என்று கூறியபோது முதல்வர் பதவி என்பது மூர் மார்க்கெட்டில் கிடைக்கும் பொம்மை அல்ல , அனைவரும் போய் வாங்குவதற்கு என்றும் அமைச்சர் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் ராமேஸ்வரத்தில் உள்ள அப்துல் கலாம் வீட்டிலிருந்து கமல் தனது அரசியல் பயணத்தை தொடங்கினார். இதற்கிடையில் சென்னை பட்டினப்பாக்கத்தில் அமைச்சர் ஜெயக்குமார் நிருபர்களிடம் கூறுகையில், மீனவர்களை நடத்தும் விதத்திலேயே தெரிகிறது கமலுக்கு தலைமை பண்பு இல்லை. நிர்வாகத் திறனும் இல்லை. காலை 7.30 மணிக்கு பள்ளிக் கூடத்துக்கு சென்ற ஒரே நபர் கமல்தான். பள்ளியில் இருந்து அரசியலை தொடங்கக் கூடாது. மக்களை சந்தித்து தொடங்க வேண்டும். பள்ளி என்பது அரசியல் தொடங்குவதற்கான இடம் இல்லை என்றார் அமைச்சர்.

அரசியல் பிரவேசம் செய்யும் கமல், ரஜினி போன்றோர் காதிதப்பூக்கள் என்று ஸ்டாலின் கூறியிருந்தார். அந்த கருத்துக்கு நானும் உடன்படுகிறேன். நான் காகிதப்பூவல்ல, விதையாக உருவெடுப்பேன் என்று கமல் கூறியுள்ளார். அவர் மரபணு மாற்றப்பட்ட விதை , அதனால் யாருக்கும் பயன் இல்லை. மேலும் அந்த விதையை நாம் இதுவரை தமிழகத்தில் விதைத்ததில்லை என்றார் ஜெயக்குமார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து