அரசியலில் ஈடுபடும் அளவிற்கு சினிமா நடிகர்களுக்கு பொறுமை கிடையாது: அமைச்சர் உதயகுமார்

ஞாயிற்றுக்கிழமை, 14 அக்டோபர் 2018      அரசியல்
RB Udayakumar 2018 7 16

திருப்பரங்குன்றம், சினிமா நடிகர்களுக்கு அரசியலில் ஈடுபடும் அளவிற்கு பொறுமையும் சகிப்புத்தன்மையும் கிடையாது என்று அமைச்சர் உதயகுமார் தெரிவித்தார்.

விஜய் அரசியல் பிரவேசத்தை கண்டு சிலர் அச்சப்படுவதாக அவரது தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் கூறினார். விஜய் அரசியலில் குதித்து அடிபடாமல் தப்பினால் சரி என ஏற்கனவே அமைச்சர் உதயகுமார் கூறியிருந்தார். நடிகர் விஜய்யின் அரசியல் பிரவேசம் குறித்த அச்சத்தில் யாருக்கும் காய்ச்சல் ஒன்றும் வரவில்லை.

தமிழகத்தில் குடிநீர் பிரச்சினை உள்ளதாக நடிகர் கமல் கூறியுள்ளார். ரூ.15 லட்சம் கோடி மதிப்பிலான விஷன் - 2023 திட்டத்தை பற்றி முழுமையாக படித்திருந்தால் கமல் இவ்வாறு உளற மாட்டார். சினிமா நடிகர்களுக்கு அரசியலில் ஈடுபடும் அளவிற்கு பொறுமையும் சகிப்புத்தன்மையும் கிடையாது. முதல்வர் பழனிசாமி நிலையான முதல்வர், அவர் பதவி விலக மாட்டார்.  எதற்கெடுத்தாலும் பதவி விலகச் சொல்வதையே ஸ்டாலின் வழக்கமாக கொண்டுள்ளார் என கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து