முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விங் கமாண்டர் அபிநந்தனுக்கு வீர் சக்ரா விருது

புதன்கிழமை, 14 ஆகஸ்ட் 2019      இந்தியா
Image Unavailable

புது டெல்லி, : பாகிஸ்தான் ராணுவத்திடம் சிக்கி அங்கிருந்து மீண்டு வந்த விங் கமாண்டர் அபிநந்தனுக்கு வீர் சக்ரா விருது வழங்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது.

புல்வாமா தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய விமானப்படை பாகிஸ்தான் எல்லைக்குள் நுழைந்து பயங்கரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தியது. இதையடுத்து பாகிஸ்தானின் எப்-16 ரக விமானங்கள் இந்திய எல்லைக்குள் நுழைந்து தாக்குதல் நடத்த முயன்றன. இவற்றை இந்திய விமானப்படையின் விங் கமாண்டோ குழுவினர் விரட்டிச் சென்று பதில் தாக்குதல் நடத்தினர்.  இந்த குழுவில் தமிழகத்தை சேர்ந்த விங் கமாண்டர் அபிநந்தன் வர்த்தமானும் ஒருவராக இருந்தார். இவர் பாகிஸ்தானின் எப்-16 விமானத்தை சுட்டு வீழ்த்தி அசத்தினார். அப்போது அவர் சென்ற மிக்-21 ரக விமானம் விபத்தில் சிக்கி நொறுங்கியது.

இந்த நிலையில் அபிநந்தனின் விமானம் பாகிஸ்தான் எல்லைக்குள் விழுந்ததால் அந்நாட்டு ராணுவத்தால் சிறை பிடிக்கப்பட்டார். இதையடுத்து சர்வதேச அளவில் பாகிஸ்தானுக்கு அழுத்தம் கொடுக்கும் வேலையை இந்தியா மேற்கொண்டது. இதன் காரணமாக 60 மணி நேரத்திற்கு பின் அபிநந்தன் பத்திரமாக இந்தியா திரும்பினார். இதையடுத்து பல்வேறு கட்ட பரிசோதனைகளுக்கு பிறகு அபிநந்தன் மீண்டும் விமானப்படையில் சேர்க்கப்பட்டார். இதன் பிறகு அபிநந்தன் உலகம் முழுவதும் பிரபலம் அடைந்தார். எதிரி நாட்டு வீரர்கள் கேட்ட ராணுவ ரகசிய கேள்விகளுக்கு பதில் அளிக்க முடியாது என்று கூறியது மக்களை பெரிதும் கவர்ந்தது.

இந்நிலையில், அபிநந்தனின் வீரதீர செயலை பாராட்டி அவருக்கு டெல்லியில் இன்று நடைபெறும் சுதந்திரதின விழாவில் வீர் சக்ரா விருது வழங்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. போர்க்களத்தில் சிறப்பாக செயல்படும் வீரர்களுக்கு வீர் சக்ரா வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது. இதே போல் பாகிஸ்தானுக்குள் புகுந்து பயங்கரவாத முகாம்கள் மீது வான் தாக்குதல் நடத்திய இந்திய விமானப்படையின் 5 பைலட்டுகளுக்கு வாயு சேனா விருது வழங்கப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து