முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சம்ஜவ்தா, தார் எக்ஸ்பிரஸ் ரயில்களை மீண்டும் இயக்க பாகிஸ்தான் மறுப்பு

ஞாயிற்றுக்கிழமை, 18 ஆகஸ்ட் 2019      உலகம்
Image Unavailable

இஸ்லாமாபாத் : ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து சம்ஜவ்தா எக்ஸ்பிரஸ், தார் எக்ஸ்பிரஸ் ரயில் போக்குவரத்தை ரத்து செய்த பாகிஸ்தான் மீண்டும் ரயில் போக்குவரத்தை தொடங்க முடியாது என்று இந்தியா சார்பில் விடுக்கப்பட்ட கோரிக்கையை ஏற்க மறுத்து விட்டது. இந்த செய்தியை பாகிஸ்தானின் தி எக்ஸ்பிரஸ் ட்ரிபியூன் நாளேடு வெளியிட்டுள்ளது.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்டிருந்த சிறப்பு சலுகைகளை மத்திய அரசு ரத்து செய்து மாநிலத்தை இரண்டாகப் பிரித்து அறிவித்தது. இந்தியாவின் இந்த நடவடிக்கையை பாகிஸ்தான் கடுமையாக எதிர்த்து ஐ.நா.வுக்குக் கடிதம் எழுதியுள்ளது. மேலும் சர்வதேச சமூகத்தின் உதவியையும் அந்நாடு கோரியுள்ளது.

இந்தியாவின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்த பாகிஸ்தான் முதலில் லாகூர்- டெல்லி சம்ஜவ்தா எக்ஸ்பிரஸ் ரயிலை பாகிஸ்தான் பகுதிக்குள் அனுமதிக்க மறுத்து நிறுத்தியது. அதன்பின் ஜோத்பூர் - கராச்சி இடையேயான தார் எக்ஸ்பிரஸ் ரயிலையும் அனுமதிக்காமல் தடுத்து நிறுத்தியது. இந்நிலையில், அடுத்த கட்டமாக டெல்லி - லாகூர் இடையே சென்று வந்த நட்புறவு அடிப்படையிலான பஸ் போக்குவரத்தையும் பாகிஸ்தான் தற்காலிகமாக ரத்து செய்தது. இந்தியாவும் கடந்த திங்கள்கிழமை முதல் டெல்லியில் இருந்து புறப்படும் பஸ் போக்குவரத்தை ரத்து செய்தது.

இந்நிலையில் நிறுத்தப்பட்ட சம்ஜவ்தா எக்ஸ்பிரஸ் ரயில், தார் எக்ஸ்பிரஸ் ரயில் சேவையை மீண்டும் தொடங்க வேண்டும். இரு நாட்டு மக்களும் பயன்பெற வேண்டும் என இந்திய ரயில்வே சார்பில் பாகிஸ்தான் ரயில்வே துறை அதிகாரிகளிடம் கோரிக்கை வைக்கப்பட்டு இருந்ததாக தி எஸ்க்பிரஸ் ட்ரிபியூன் நாளேடு தெரிவித்துள்ளது. ஆனால், இந்திய அதிகாரிகள் சார்பில் விடுக்கப்பட்ட அந்த கோரிக்கையை பாகிஸ்தான் அதிகாரிகள் ஏற்கவில்லை என்றும், லாகூர், கராச்சி ரயில் மண்டல கண்காணிப்பாளர்களுக்கு பிறப்பிக்கப்பட்ட உத்தரவில், தார் எக்ஸ்பிரஸ் ரயில், சம்ஜவ்தா ரயில் ஆகிய இரு ரயில் சேவையையும் காலவரையின்றி நிறுத்தி வைக்கவும் பாகிஸ்தான் அரசு உத்தரவிட்டுள்ளதாகத் தெரிகிறது. இந்த ரயில்கள் வாரத்துக்கு இரு முறை இயக்கப்பட்டன. சம்ஜவ்தா எக்ஸ்பிரஸ் வாரத்தில் திங்கள், வியாழக்கிழமையும், தார் எக்ஸ்பிரஸ் ரயில் வாரத்தில் ஒருநாள் வெள்ளிக்கிழமை மட்டும் இயக்கப்பட்டு வந்தன. இந்த ரயில் போக்குவரத்து திடீர் ரத்தால், இரு நாடுகளச் சேர்ந்த மக்களும், தங்களின் உறவினர்களை சந்திக்க முடியாமலும், வர்த்தகத்தை தொடர முடியாமலும் பெரும் அவதிக்கு ஆளாகி இருக்கின்றனர் என்று தெரியவந்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து