முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தங்கம் விலை சவரனுக்கு ரூ. 32 குறைவு

திங்கட்கிழமை, 21 அக்டோபர் 2019      வர்த்தகம்
Image Unavailable

சென்னை : சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 32 ரூபாய் குறைந்து 22 கேரட் தங்கத்தின் விலை ஒரு கிராமக்கு 4 ரூபாய் குறைந்து கிராம் விலையானது ரூ.3,668 ஆகவும், ஒரு சவரன் தங்கத்தின் விலையானது ரூ.29,296 ஆக விற்பனை செய்யப்பட்டது. அதே நேரம் வெள்ளியில் எந்த வித மாற்றமும் இன்றி ஒரு கிராம் ரூ.49.20-க்கு விற்பனை செய்யப்பட்டது. சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலையில் ஏற்ற இறக்கம் நிலவி வருகிறது. இதன் எதிரொலியாக உள்ளூரிலும் தங்கத்தின் விலையில் மாற்றம் உண்டாகிறது.

இந்நிலையில், இந்தியாவில் நடப்பாண்டில் தங்கத்தின் தேவை குறைவாகவே நீடிக்கும் என உலக தங்க கவுன்சில் தெரிவித்துள்ளது. உலகளவில் தங்கம் வாங்குவதில் இந்தியா இரண்டாம் இடத்தில் உள்ளது. ஆனால், தங்கம் விலையில் காணப்படும் ஏற்ற, இறக்கம் மற்றும் பொருளாதார மந்தநிலை காரணமாக அதை வாங்குவதில் தேக்கநிலை தொடரும் என்று கூறப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து