முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜனவரி 24-ம் தேதி தி.மு.க.வின் 2-வது இளைஞரணி மாநாடு

வியாழக்கிழமை, 18 டிசம்பர் 2025      அரசியல்
DMK-Offces 2023 03 31

சென்னை, முதற்கட்டமாக தி.மு.க. வடக்கு மண்டல நிர்வாகிகள் சந்திப்பு மாநாடு திருவண்ணாமலையில் நடைபெற்ற நிலையில், அதனை தொடர்ந்து 2-வது மாநாட்டை ஜனவரி 24-ம் தேதி நடத்த தி.மு.க. இளைஞரணி முடிவு செய்துள்ளது.

தி.மு.க.வில் சட்டமன்ற தேர்தல் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. தேர்தலையொட்டி பல்வேறு அணிகளின் செயல்பாடுகள், ஆலோசனைகள் வழங்கப்பட்டு வருகிறது. தி.மு.க. இளைஞர் அணியில் தமிழகம் முழுவதும் 5 லட்சம் நிர்வாகிகள், 50 லட்சத்திற்கும் மேற்பட்ட உறப்பினர்கள் உள்ளனர்.

இதில் உள்ள 5 லட்சம் நிர்வாகிகளை ஒன்றிணைத்து மண்டலம் தோறும் நிர்வாகிகள் சந்திப்பு மாநாடு நடத்த தி.மு.க. தலைவர் முதல்வர்மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார். அதன்படி முதற்கட்டமாக வடக்கு மண்டல நிர்வாகிகள் சந்திப்பு மாநாடு திருவண்ணாமலையில் நடைபெற்றது. அதனை தொடர்ந்து 2-வது மாநாட்டை நடத்த தி.மு.க. இளைஞரணி முடிவு செய்துள்ளது.

இந்த நிலையில், தென்மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களுக்கான தி.மு.க. இளைஞரணி மாநாடு ஜனவரி 24-ந்தேதி நடைபெறும் என தகவல் வெளியாகி உள்ளது. 2-வது மண்டல மாநாடு தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளதாக கூறப்படுகிறது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 6 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 8 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 8 months ago
View all comments

வாசகர் கருத்து