முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்தியா-ஓமன் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் இருதரப்பு உறவுகளுக்கான ஒரு புதிய உத்வேகம்: பிரதமர் மோடி

வியாழக்கிழமை, 18 டிசம்பர் 2025      உலகம்
Pm-modi-2025-12-18

மஸ்கட், இந்தியா-ஓமன் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளுக்கு புதிய திசையையும் உத்வேகத்தையும் அளிக்கும் என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.

இரு நாடுகளுக்கு இடையே கடந்த 2023 நவம்பரில் தொடங்கிய தடையற்ற ஒப்பந்தப் பேச்சுவார்த்தை 2025 இல் நிறைவு பெற்றது. இதற்கு முன்பு கடந்த 2006 ஜனவரியில் அமெரிக்காவுடன் ஓமன் தடையற்ற வா்த்தகம் ஒப்பந்தம் மேற்கொண்டது. அதன்பிறகு 20 ஆண்டுகளுக்குப் பிறகு இப்போது இந்தியாவுடன் அதேபோன்ற ஒப்பந்தம் மேற்கொள்ளப்படுகிறது.

இந்தியா-ஓமன் இடையே தடையற்ற வா்த்தக ஒப்பந்தம் பிரதமா் நரேந்திர மோடி முன்னிலையில் நேற்று (டிச. 18) கையொப்பமானது. இதற்காக மத்திய வா்த்தகம், தொழில் துறை அமைச்சா் பியூஷ் கோயல் ஓமன் தலைநகா் மஸ்கட்டுக்கு பயணம் மேற்கொண்டுள்ளாா். இந்த நிலையில், ஜோர்டான், எத்தியோப்பியா பயணத்தை முடித்துக் கொண்டும் ஓமன் சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி, இந்தியா-ஓமன் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளுக்கு புதிய திசையையும் உத்வேகத்தையும் அளிக்கும் என்று கூறியுள்ளார்.

இந்தியா-ஓமன் வர்த்தக உச்சி மாநாட்டில் பங்கேற்று உரையாற்றிய பிரதமர் மோடி, இந்த உச்சிமாநாடு இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளுக்கு ஒரு புதிய திசையையும் உத்வேகத்தையும் அளிக்கும் என்று அவர் கூறினார். மாண்ட்வி மற்றும் மஸ்கட்டை அரபிக் கடலுக்கு அப்பால் இணைக்கும் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க கடல்சார் மரபின் வாரிசுகளாக வர்த்தகத் தலைவர்கள் திகழ்கின்றனர் என்றார்.

பருவங்கள் மாறலாம், ஆனால் இந்தியாவிற்கும் ஓமனுக்கும் இடையிலான நட்பு காலப்போக்கில் மேலும் வலுவடைந்து வருகிறது என்று அவர் கூறினார். மேலும், 70 ஆண்டுகால ராஜதந்திர உறவுகளை எடுத்துரைத்த மோடி, இந்தக் கூட்டாண்மை நம்பிக்கை மற்றும் நட்பின் அடிப்படையில் கட்டமைக்கப்பட்டுள்ளது என்றும், தற்போது பகிரப்பட்ட பாரம்பரியத்தில் வேரூன்றிய வளமான எதிர்காலத்தை எதிர்நோக்குகிறோம் என்றும் கூறினார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 6 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 8 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 8 months ago
View all comments

வாசகர் கருத்து