முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரிஷப் பந்தை விமர்சிக்காதீர்கள்! ரோகித் சர்மா வேண்டுகோள்

சனிக்கிழமை, 9 நவம்பர் 2019      விளையாட்டு
Image Unavailable

நாக்பூர் : ரிஷப் பந்தை விமர்சிக்க வேண்டாம், அவரை தனியாக விட்டு விடுங்கள் என இந்திய கிரிக்கெட் அணியின் தற்போதைய கேப்டன் ரோகித் சர்மா தெரிவித்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் மிகச் சிறந்த விக்கெட் கீப்பர் மற்றும் பேட்ஸ்மேனான மகேந்திர சிங் டோனி உலகக் கோப்பை  போட்டிகளுக்கு பிறகு இந்திய அணியில் சேர்க்கப்படவில்லை. டோனிக்கு பிறகு விக்கெட் கீப்பராக உருவெடுக்கும் ரிஷப் பந்திற்கு ஒரு  விதமான அழுத்தம் இருந்து கொண்டே தான் இருக்கிறது. விக்கெட் கீப்பிங் மற்றும் பேட்டிங்கில் தொடர்ந்து விமர்சனத்திற்கு உள்ளாகி  வருகிறார். வங்காளதேச கிரிக்கெட் அணி மூன்று 20 ஓவர் போட்டி மற்றும் இரண்டு டெஸ்டில் விளையாடுவதற்காக இந்தியா வந்துள்ளது. கடந்த  3-ம் தேதி டெல்லியில் நடைபெற்ற முதல் போட்டியில் வங்காளதேசம் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தியது.  அந்த போட்டியில் தவறான ரிவியுவ் எடுக்க வலியுறுத்தி ரிஷப் பந்த் கடுமையான விமர்சனத்திற்கு உள்ளானார். இரண்டாவது டி20  போட்டி கடந்த 7-ம் தேதி ராஜ்கோட்டில் நடைபெற்றது. முதலில் வங்காள தேசம் அணி பேட் செய்தது. அந்த போட்டியிலும் ரிஷப் பந்த்  தவறிழைத்தார். சாஹல் வீசிய 6 வது ஓவரில் வங்காள தேச வீரர் லிட்டன் தாஸ் கிரீசை விட்டு வெளியேறி பந்தை அடிக்க முயன்றார். ஆனால் பந்து  அவரது பேட்டில் படவில்லை. ரிஷப் பந்த் அவரை ஸ்டம்பிங் செய்தார். ஐ.சி.சி விதிமுறைகள் படி பந்து ஸ்டம்பை கடந்த பிறகே  ஸ்டம்பிங் செய்ய வேண்டும். ஆனால் பந்து ஸ்டம்பை கடக்கும் முன்பே அவர் பந்தை பிடித்து ஸ்டம்பில் அடித்ததால் அது அவுட்  இல்லை என அறிவிக்கப்பட்டது. இந்தியா இந்த போட்டியில் வெற்றி பெற்றது. ஆனால் ரிஷப் பந்தின் இந்த செயல் விமர்சனத்திற்கு  உள்ளானது.

இந்நிலையில், ரிஷப் பந்தை யாரும் விமர்சிக்க வேண்டாம், அவரை தனியாக விட்டு விடுங்கள் அவர் அணி நிர்வாகத்தின் யுக்தியை  செயல்படுத்தவே முயல்கிறார், என ரோகித் சர்மா கூறியுள்ளார். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நிமிடமும் அனைவரும் ரிஷப் பந்தை பற்றியே விமர்சிக்கிறார்கள். களத்தில் அவர் என்ன செய்ய  விரும்புகிறாரோ அதை செய்ய அனுமதிக்க வேண்டும். அவர் மீதிருந்து உங்களது விமர்சன பார்வையை விலக்கிக் கொள்ளுங்கள் என  ரோகித் சர்மா குறிப்பிட்டுள்ளார். டோனியுடன் ரிஷப்பந்தை ஒப்பிட வேண்டாம். ரிஷப், டோனியிடமிருந்து கற்றுக் கொண்டு தனக்கென ஒரு பாணியை  உருவாக்கிக்கொள்ள வேண்டும் என ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் விக்கெட் கீப்பர் ஆடம் கில்கிறிஸ்ட் சமீபத்தில் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து