முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வடகொரியா ராணுவ பயிற்சி கிம் ஜாங் அன் நேரில் ஆய்வு

செவ்வாய்க்கிழமை, 19 நவம்பர் 2019      உலகம்
Image Unavailable

பியாங்காங் : வடகொரியாவில் விமானப்படை மற்றும் விமான எதிர்ப்பு படையை சேர்ந்த பாராசூட் வீரர்களின் ராணுவ பயிற்சி நடைபெற்றது. இதை அந்த நாட்டின் தலைவர் கிம் ஜாங் அன் நேரில் ஆய்வு செய்தார்.

கொரிய எல்லையில் அமெரிக்கா மற்றும் தென்கொரியாவின் விமானப்படைகள் இணைந்து கூட்டு ராணுவ பயிற்சியில் ஈடுபட திட்டமிடப்பட்டிருந்த நிலையில், அது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. அமெரிக்கா மற்றும் வடகொரியா இடையிலான அணு ஆயுத பேச்சுவார்த்தையை விரைந்து நடத்திட நல்லெண்ண அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் எந்தவித முன் அறிவிப்புமின்றி வடகொரியாவின் விமானப்படை திடீர் ராணுவ பயிற்சியில் ஈடுபட்டு உள்ளது. இந்த ராணுவ பயிற்சி கடந்த 3 நாட்களாக நடந்து வருகிறது. விமானப்படை மற்றும் விமான எதிர்ப்பு படையை சேர்ந்த பாராசூட் வீரர்களின் ராணுவ பயிற்சி நடைபெற்றது. இதை அந்த நாட்டின் தலைவர் கிம் ஜாங் அன் நேரில் ஆய்வு செய்தார். அப்போது பேசிய அவர்,

வடகொரியாவின் ராணுவத்தை வெல்ல முடியாத ராணுவமாக உருவாக்குவதற்கும், போருக்கு தயார் நிலையில் இருப்பதற்கும் இப்படி அறிவிப்பு இல்லாமல் ஒரு பயிற்சியை மேற்கொள்வது அவசியம் என கூறினார். முன்னதாக அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் வடகொரியா விவகாரம் தொடர்பாக டுவிட்டரில் பதிவு ஒன்றை வெளியிட்டார். அதில் அவர்,

கிம் ஜாங் அன், நீங்கள் விரைந்து செயல்பட வேண்டும். கொரிய தீபகற்பத்தை அணுஆயுதமற்ற பிரதேசமாக மாற்றுவதற்கான ஒரு ஒப்பந்தத்தை ஏற்படுத்துங்கள். விரைவில் உங்களை சந்திக்கிறேன் என குறிப்பிட்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து