Idhayam Matrimony

69-ம் ஆண்டு நினைவு நாள்: பட்டேலுக்கு பிரதமர் மோடி புகழஞ்சலி

ஞாயிற்றுக்கிழமை, 15 டிசம்பர் 2019      இந்தியா
Image Unavailable

இந்தியாவின் முதல் உள்துறை அமைச்சர் சர்தார் வல்லபாய் பட்டேலின் 69-ம் ஆண்டு நினைவு நாள் நேற்று அனுஷ்டிக்கப்பட்டது. இதையொட்டி நாட்டுக்கு அவர் ஆற்றிய சேவைகளுக்கு பிரதமர் மோடி புகழஞ்சலி சூட்டியுள்ளார்.

நாட்டை ஒன்றுபடுத்தியதை குறிப்பிடும் வகையில் குஜராத் மாநிலத்தின் நர்மதா மாவட்டத்தில் சர்தார் சரோவர் அணை அருகே சாது பேட் என்ற குட்டித்தீவில் சர்தார் வல்லபாய் படேலுக்கு மிகப்பிரமாண்டமான சிலை அமைக்கப்பட்டு உள்ளது. ஒருமைப்பாடு சிலை என்று இது அழைக்கப்படுகிறது. 182 மீட்டர் உயரத்தில் உலகிலேயே மிக உயரமான சிலையாகவும் கருதப்படுகிறது. அந்த பெருமகனாரின் 69-வது நினைவுநாள் நேற்று அனுசரிக்கப்பட்டது. இந்த நிலையில் தனது டுவிட்டர் பக்கத்தில் சர்தார் வல்லபாய் பட்டேலை வாழ்த்தி பிரதமர் மோடி பதிவிட்டுள்ளார். அதில், மிக உயரிய தலைவரான சர்தார் பட்டேலின் நினைவுநாளன்று அவருக்கு தலை வணங்குகிறேன். நமது நாட்டுக்கு அவர் ஆற்றிய சேவைகளால் நாம் ஆத்மார்த்தமாக உத்வேகம் அடைந்துள்ளோம் என குறிப்பிட்டுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து