முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்திக்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி வரும் 19-ம் தேதி டெல்லி பயணம்

ஞாயிற்றுக்கிழமை, 15 டிசம்பர் 2019      தமிழகம்
Image Unavailable

முதல்வர் எடப்பாடி பழனிசாமி வரும் 19-ம் தேதி டெல்லிக்கு பயணம் மேற்கொள்கிறார். அங்கு பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்டோரை சந்தித்து பேசுகிறார். அப்போது கோரிக்கைகள் அடங்கிய மனுவையும் அவர் பிரதமரிடம் அளிக்கிறார். 

மகாத்மா பிறந்த நாள் விழா

தேசப் பிதா மகாத்மா காந்தியின் 150-ம் ஆண்டு பிறந்த நாள் விழாவை நாடு முழுவதும் சிறப்பாக கொண்டாட மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இது தொடர்பாக அனைத்து மாநில முதல்வர்கள் கூட்டம் ஒன்றை டெல்லியில் பிரதமர் மோடி கூட்டியுள்ளதாக தெரிகிறது.
 
பிரதமர் மோடி அழைப்பு

இந்நிலையில் பிரதமர் மோடியின் அழைப்பை ஏற்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி வரும் 19-ம் தேதி டெல்லிக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். அங்கு பிரதமர் நரேந்திர மோடியையும், உள்துறை அமைச்சர் அமித்ஷாவையும் சந்தித்து பேசுகிறார், அப்போது அவர் தமிழக திட்டங்களுக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகையை மத்திய அரசு வழங்க வேண்டும் என்றும், காவிரி, முல்லை பெரியாறு, பாலாறு உள்ளிட்ட பல்வேறு நதிநீர் பிரச்னைகள் குறித்தும் விரிவான கோரிக்கை மனுவொன்றையும் பிரதமரிடம் முதல்வர் எடப்பாடி பழனிசாமி வழங்குவார் என்று அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.

கோரிக்கை மனு

ஏற்கனவே முதல்வர் எடப்பாடி பழனிசாமி டெல்லி சென்ற போதெல்லாம் பிரதமர் மோடியை சந்தித்து தமிழக திட்டங்களுக்கான கோரிக்கை மனுக்களை அளித்துள்ளார். அப்போது காவிரி, கோதாவரி நதிகள் இணைப்பு திட்டத்தை விரைந்து செயல்படுத்த வேண்டும். தமிழகத்திற்கு வழங்க வேண்டிய ஜி.எஸ்.டி. நிலுவை தொகையை வழங்க வேண்டும் மற்றும் தமிழக திட்டங்களுக்கு வழங்க வேண்டிய நிதியை உடனே அளிக்க வேண்டும் போன்ற கோரிக்கைகள் அடங்கிய மனுவை முதல்வர் அளித்துள்ளார். தற்போதும் அவர் அது போன்ற கோரிக்கை மனுவை பிரதமரிடம் அளிக்கவிருக்கிறார். தனது டெல்லி பயணத்தின் போது மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் உள்ளிட்ட முக்கிய அமைச்சர்களை அவர் சந்தித்து தமிழக திட்டங்கள் குறித்து பேசுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

முதல்வர் எடப்பாடி பழனிசாமி மத்திய  உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்திக்கும் போது உள்துறை அமைச்சக ஆலோசகரும், முன்னாள் ஐ.பி.எஸ். அதிகாரியுமான விஜயகுமார் பங்கேற்க உள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து