முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நாமக்கல்லில் சிறுவன் உயிரிழப்பு: இழப்பீட்டை உயர்த்தி வழங்க எடப்பாடி பழனிசாமி கோரிக்கை

வெள்ளிக்கிழமை, 2 ஜனவரி 2026      தமிழகம்
Eps   2024-12-02

சென்னை, நாமக்கல்லில் சிறுவன் உயிரிழந்த விவகாரத்தில் இழப்பீட்டை உயர்த்தி வழங்க எடப்பாடி பழனிசாமி கோரிக்கை விடுத்துள்ளார்.

அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், நாமக்கல் மாநகராட்சியின் 4-வது வார்டில் பாதாள சாக்கடைக்காக தோண்டப்பட்ட, தண்ணீர் தேங்கிய 5 அடிக் குழியில் தவறி விழுந்ததில் 4 வயது சிறுவன் ரோகித் பரிதாபமாக உயிரிழந்ததாக வரும் செய்தி அதிர்ச்சி அளிக்கிறது. சிறுவன் ரோகித்தின் உயிரிழப்புக்கு முழு காரணம் அரசின் அலட்சியம் மட்டுமே.

இது போன்ற உயிரிழப்பு நேர்வது இதென்ன முதல் முறையா? தவறு என்பது ஒருமுறை நிகழ்வது தான். மீண்டும் மீண்டும் நடப்பது என்பது, நிர்வாகச் சீர்கேட்டால் நடந்த கொலை என்று சொன்னால் கூட அது மிகையாகாது. பச்சிளம் பிள்ளையை இழந்து வாடும் அந்த பெற்றோருக்கு என்ன பதில் சொல்லப்போகிறார் முதல்வர்?

உயிரிழந்த சிறுவன் ரோகித்தின் பெற்றோருக்கு எனது ஆழ்ந்த இரங்கல். அவர்களுக்கு அளிக்கப்பட்டுள்ள நிவாரணம் நிச்சயம் போதுமானது அல்ல. எவ்வளவு கொடுத்தாலும் குழந்தையின் இழப்புக்கு ஈடாகாது எனினும், இழப்பீட்டை உயர்த்தி வழங்க வேண்டும் எனவும், பாதாள சாக்கடை உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ளும் போது, முழுமையான பாதுகாப்பு நெறிமுறைகள் பின்பற்றப்படுவதை அரசு உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 7 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 9 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 9 months ago
View all comments

வாசகர் கருத்து