முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

என் உடல்நிலை சீராகவே உள்ளது: ட்ரம்ப் விளக்கம்

வெள்ளிக்கிழமை, 2 ஜனவரி 2026      உலகம்
Trump

வாஷிங்டன், அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்பின் உடல்நிலை பற்றி பல்வேறு விவாதங்களும் எழுந்துவரும் நிலையில். ‘தி வால் ஸ்ட்ரீட் ஜர்னல்’ பத்திரிகைக்கு அதிபர் ட்ரம்ப் அளித்துள்ள பேட்டியில் தனது உடல்நிலை பற்றி தெளிவுபடுத்தியுள்ளார்.

முன்னதாக, ட்ரம்ப்பின் வலது கையில் காயம் ஏற்பட்டிருப்பதாகவும் அதை மறைக்க அவரது கையில் மேக் - அப் பூசப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் பரவி அது குறித்த விவாதங்களும் எழுந்தன. அண்மையில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை, ட்ரம்ப் வரவேற்றபோது வெளியான புகைப்படங்களில் ட்ரம்ப்பின் வலது கையில் வெள்ளை நிற பேட்ச் , ஏற்கெனவே இருந்த விவாதங்களுக்கு மேலும் தீனி போட்டது. ட்ரம்ப்புக்கு இப்போது 79 வயது. அவர் பதவிக்காலத்தை முடிக்கும்போது 82 வயதாகும். முந்தைய அதிபர் ஜோ பைடன் தான் அமெரிக்க அதிபர் வரலாற்றிலேயே அதிக வயது கொண்ட நபராக இருந்த நிலையில், அந்தச் சாதனையை ட்ரம்ப் முறியடிக்கக்கூடும்.

இந்நிலையில் ட்ரம்ப் அளித்த தொலைபேசி பேட்டி வருமாறு: என உடல்நிலை சீராக உள்ளது. நான் தினமும் 325 மில்லி கிராம் அளவிலான ஆஸ்பிரின் மாத்திரையை உட்கொள்கிறேன். சிலர் அது அதிகம் என்கிறார்கள். நான் மருத்துவர் பரிந்துரையின்படியே அதனை எடுக்கிறேன். அதை எடுக்காவிட்டால் ரத்தம் அடர்த்தி மிகுமாம். எனக்கு எனது இதயத்துக்குள் நல்ல மெலிதான ரத்தமே செல்ல வேண்டும் என விரும்புகிறேன். அதனால் ஆஸ்பிரின் எடுக்கிறேன். நான் நீண்ட கால பழக்கங்களைக் கைவிட விரும்பவதில்லை. எனக்கு கொஞ்சம் மூடநம்பிக்கை அதிகம்.

நான் செய்யும் ஒரே ஒரு உடற்பயிற்சி கோல்ஃப் விளையாடுவது தான். அதுவும் நான் வார நாட்களில் விளையாடுவது இல்லை. கடந்த சில வாரங்களுக்கு முன்னர் நான் ஒரு ஸ்கேன் எடுத்துக் கொண்டேன். அதுவும் கூட எல்லோரும் சொல்வது போல் எம்ஆர்ஐ ஸ்கேன் அல்ல வெறும் சிடி ஸ்கேன் தான். அது வழக்கமான உடல்நிலை பரிசோதனைக்கானது என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 7 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 9 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 9 months ago
View all comments

வாசகர் கருத்து