ரூ. 15,128 கோடி முதலீட்டில் 17 தொழில் நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் : முதல்வர் எடப்பாடி முன்னிலையில் கையெழுத்து : சுமார் 47,150 பேருக்கு புதிய வேலை வாய்ப்பு கிடைக்கும்

புதன்கிழமை, 27 மே 2020      தமிழகம்
Edappadi govt 2020 05 27

Source: provided

சென்னை : சென்னை தலைமைச் செயலகத்தில், தொழில் துறை சார்பில் ஜெர்மனி, பின்லாந்து, தைவான், பிரான்ஸ், தென் கொரியா, ஜப்பான், சீனா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நெதர்லாந்து ஆகிய நாடுகளைச் சார்ந்த 17 தொழில் நிறுவனங்கள் தங்கள் புதிய தொழில் முதலீட்டு திட்டங்களை தமிழ்நாட்டில் துவங்கிட புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடும் நிகழ்ச்சி முதல்வர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் நடைபெற்றது.  இத்திட்டங்கள் மூலம், 15,128  கோடி ரூபாய் முதலீட்டில் சுமார் 47,150 நபர்களுக்கு புதிய வேலை வாய்ப்புகள் உருவாகும்.

உலகத்தையே அச்சுறுத்தி வரும் கொரோனா நோய் தொற்றின் காரணமாக, உலக பொருளாதாரம் பெருமளவில் பாதிக்கப்பட்டு, படிப்படியாக மீண்டெழுந்து வரும் இந்த இக்கட்டான சூழ்நிலையில்,  தமிழ்நாட்டில் தொழில் வளர்ச்சியை தொடர்ந்து மேம்படுத்தவும், தொழில் துறையில் தொடர்ந்து முன்னணி மாநிலமாக திகழச் செய்யவும், முதல்வரின் சீரிய வழிகாட்டுதல்களின்படி, தமிழ்நாடு அரசின் தொழில் துறை மூலம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது.

புதிய முதலீடுகளை ஈர்க்க தலைமைச் செயலாளர் தலைமையில் உயர்நிலைக் குழு அமைத்தது, பொருளாதார மீட்பு நடவடிக்கைகளை பரிந்துரைக்க டாக்டர். சி. ரங்கராஜன் குழு, கொரோனா நோய் தடுப்புக்கான உபகரணங்கள் மற்றும் மருந்துகள் உற்பத்தியை தமிழ்நாட்டில் ஊக்குவிக்க அளிக்கப்பட்ட சிறப்பு சலுகைகளின் விளைவாக, பல்வேறு நிறுவனங்கள் கடந்த இரு மாதங்களில் மட்டும் புதிதாக இப்பொருட்களை உற்பத்தி செய்யத் துவங்கியுள்ளது,

799 குறு, சிறு நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கு தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம் மூலமாக 102 கோடி ரூபாய் செயல்பாட்டு மூலதனக் கடன் வழங்கியது என  இக்கட்டான இக்கால கட்டத்திலும் பல முக்கிய நடவடிக்கைகளை அரசு தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது.    மேலும், தமிழ்நாடு வழிகாட்டி நிறுவனத்தில் வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு சிறப்பு கவனம் செலுத்திட ஏற்படுத்தப்பட்ட நாடுகளுக்கான சிறப்பு இருக்கைகள், தொழில் நிறுவனங்களின் குறைகளை உடனுக்குடன் தீர்க்க “தொழில் நண்பன்” திட்டம், அனுமதிகளை உடனுக்குடன் வழங்க ஒற்றைச் சாளர முறை, முதலீடு எளிதாக்குதல் பிரிவு, முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான உயர்நிலைக் குழு என பல்வேறு திட்டங்கள் எற்கனவே முதல்வரால் அறிவிக்கப்பட்டு செயல்பாட்டில் உள்ளன. 

தமிழ்நாட்டை   தொடர்ந்து வளர்ச்சிப்  பாதையில் அழைத்துச் செல்லும் தொலைநோக்குப்  பார்வையுடன்  முதல்வர் அறிவித்து, செயல்படுத்திய பல திட்டங்களின் விளைவாகவும், தமிழ்நாட்டில் நிலவும் சிறப்பான தொழில் சூழலின் விளைவாகவும் தொடர்ந்து பல புதிய தொழில் முதலீட்டுத் திட்டங்கள் தமிழ்நாட்டில் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.  அந்த வகையில், கனரக வாகன உற்பத்தி, மின்னணு பொருட்கள் உற்பத்தி, காலணி உற்பத்தி, தகவல் தரவு மையம், எரிசக்தி, மருந்து பொருட்கள் உற்பத்தி என பல்வேறு துறைகளைச் சார்ந்த 17 புதிய தொழில் திட்டங்களை தமிழ்நாட்டில் துவங்குவதற்கான கீழ்க்காணும் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள், முதல்வர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் நேற்று (27.5.2020) கையெழுத்திடப்பட்டன. 

அதன்படி காஞ்சிபுரம் மாவட்டம், ஒரகடம் சிப்காட் தொழிற்பூங்காவில், 2,277 கோடி ரூபாய் முதலீட்டில், சுமார் 400 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், ஜெர்மனி நாட்டைச் சேர்ந்த Daimler India Commercial Vehicles நிறுவனத்தின்,  கனரக வாகனங்கள் உற்பத்தி விரிவாக்கத் திட்டம், காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூரில் உள்ள நோக்கியா தொலைத்தொடர்பு சிறப்பு பொருளாதார மண்டலத்தில், 1,300 கோடி ரூபாய் முதலீட்டில், சுமார்  10,000 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், பின்லாந்து நாட்டினை சேர்ந்த சால்காம்ப் நிறுவனத்தின், கைப்பேசி உதிரி பாகங்கள் தயாரிப்பு விரிவாக்க திட்டம்; உலக முதலீட்டாளர்கள் மாநாடு - 2019ல் சால்காம்ப் நிறுவனம் 500 கோடி ரூபாய் முதலீடு செய்திட ஏற்கனவே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையொப்பமிட்டிருந்த நிலையில், தமிழ்நாட்டில் நிலவும் சிறப்பான தொழில் சூழலால் ஒரே ஆண்டில் மீண்டும் ஒரு விரிவாக்க திட்டத்திற்கு, புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்படுகிறது.   ஸ்ரீபெரும்புதூரில் உள்ள நோக்கியா சிறப்பு பொருளாதார மண்டலத்திற்கு புத்துயிர் அளித்திட, முதல்வரின் வழிகாட்டுதலின்படி, தொழில் துறை மேற்கொண்ட தொடர் முயற்சிகளின் பலனாக இந்த புதிய முதலீடு வரப்பெற்றுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம், ஒரகடம் சிப்காட் தொழிற்பூங்காவில், 900 கோடி ரூபாய் முதலீட்டில், சுமார் 600 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், ஜப்பான் நாட்டைச் சேர்ந்த Polymatech Electronics நிறுவனத்தின், Semiconductor Chips உற்பத்தி திட்டம், 

350 கோடி ரூபாய் முதலீட்டில், சுமார் 25,000 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில்,  தைவான் நாட்டைச் சேர்ந்த Chung Jye Company Limited நிறுவனம் மற்றும் Aston Shoes Pvt Ltd  நிறுவனத்தின் கூட்டு முயற்சியில், காலணிகள் உற்பத்தி திட்டம், 

காஞ்சிபுரம் மாவட்டம், மப்பேடு பகுதியில் 400 கோடி ரூபாய் முதலீட்டில், சுமார் 5,800 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், ஆஸ்திரேலியா நாட்டைச் சேர்ந்த Lai Investment Manager Private Limited (Logos) நிறுவனத்தின், தொழிற்பூங்கா திட்டம், 

காஞ்சிபுரம் மாவட்டம், சிப்காட் பிள்ளைப்பாக்கம் தொழிற்பூங்காவில், 150 கோடி ரூபாய் முதலீட்டில், சுமார் 250 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், தென் கொரியா நாட்டைச் சேர்ந்த Mando Automotive India Private Limited  நிறுவனத்தின் Casting facility திட்டம், 

செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள மஹிந்திரா தொழிற்பூங்காவில், 100 கோடி ரூபாய் முதலீட்டில், சுமார் 300 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், நெதர்லாந்து நாட்டைச் சேர்ந்த Dinex நிறுவனத்தின், வாகன உதிரி பாகங்கள் உற்பத்தி திட்டம், 

திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரியில் 3,000 கோடி ரூபாய் முதலீட்டில், சுமார் 3,000 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில்,  இந்திய-இங்கிலாந்து கூட்டு முயற்சியான Chennai Power Generation Limited நிறுவனத்தின், இயற்கை எரிவாயு மூலம் 750 மெகாவாட் மின் உற்பத்தி திட்டம், 

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள சிப்காட் செய்யாறு தொழிற்பூங்காவில், 18 கோடி ரூபாய் முதலீட்டில், சுமார் 30 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த IGL India Transplantation Solutions Pvt Ltd நிறுவனத்தின் உறுப்புகள் பதப்படுத்தும் இரசாயன உற்பத்தி திட்டம், 

தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில், 2,000 கோடி ரூபாய் முதலீட்டில், சுமார் 600 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில்,  பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த Vivid Solaire Energy Private Limited நிறுவனத்தின் காற்றாலை மின் உற்பத்தி விரிவாக்கத் திட்டம், 

சென்னை, அம்பத்தூரில், 2,800 கோடி ரூபாய் முதலீட்டில், சுமார் 200 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், அமெரிக்க நாட்டைச் சேர்ந்த HDCI Data Centre Holdings Chennai LLP நிறுவனத்தின், தகவல் தரவு மையம் திட்டம், 

சென்னையில், 1,500 கோடி ரூபாய் முதலீட்டில், சுமார் 200 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், சிங்கப்பூர் நாட்டைச் சேர்ந்த ST Tele Media நிறுவனத்தின், தகவல் தரவு மைய திட்டம், 

சென்னையில் 210 கோடி ரூபாய் முதலீட்டில், சுமார் 320 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், ஜெர்மனி நாட்டைச் சேர்ந்த Baettr நிறுவனத்தின், காற்றாலை உதிரி பாகங்கள் உற்பத்தி (Wind mill components)  திட்டம், 

காஞ்சிபுரம் மாவட்டம், சிப்காட் ஸ்ரீபெரும்புதூர் தொழிற்பூங்காவில், 50 கோடி ரூபாய் முதலீட்டில், சுமார் 130 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், சீன நாட்டைச் சேர்ந்த BYD India Private Limited நிறுவனத்தின் மின்சார வாகன உற்பத்தி திட்டம், 

திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரியில் உள்ள Mahindra Origins தொழிற்பூங்காவில், 46 கோடி ரூபாய் முதலீட்டில், சுமார் 100 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், தைவான் நாட்டைச் சேர்ந்த TJR Precision Technology Company Limited நிறுவனத்தின் Precision Components உற்பத்தி திட்டம், 

காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத்தில் 15 கோடி ரூபாய் முதலீட்டில், சுமார் 20 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், ஜப்பான் நாட்டைச் சேர்ந்த Pillar Industries India Pvt Limited நிறுவனத்தின், sealing materials உற்பத்தி திட்டம், 

செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள மஹிந்திரா தொழிற்பூங்காவில், 12 கோடி ரூபாய் முதலீட்டில், சுமார் 200 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், அமெரிக்க நாட்டைச் சேர்ந்த Lincoln Electric நிறுவனத்தின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு மையம் (R & D) துவங்கும்  திட்டம், 

மேற்கண்டவற்றில் முதல் 9 ஒப்பந்தங்கள் நேரடியாகவும், பிற ஒப்பந்தங்கள் காணொலிக் காட்சி மூலமாகவும் மேற்கொள்ளப்பட்டன.    

இந்நிகழ்ச்சியில், தொழில் துறை அமைச்சர் எம்.சி.சம்பத், தலைமைச்செயலாளர் சண்முகம், தொழில்துறை முதன்மைச்செயலாளர் முருகானந்தம், தமிழ்நாடு வழிகாட்டி நிறுவனத்தின்  மேலாண்மை இயக்குநர் (முழு கூடுதல் பொறுப்பு) காகர்லா உஷா, தமிழ்நாடு வழிகாட்டி நிறுவனத்தின் செயல் இயக்குநர் டாக்டர் அனீஷ் சேகர், அரசு உயர் அலுவலர்கள் மற்றும் தொழில் நிறுவனங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.  

Annai Akilandeswari Thiru Kovil Varalaaru | அன்னை அகிலாண்டேஸ்வரி திருக்கோவில் வரலாறு | #Akilandeswari

Health mix for babies | Mixed Nuts Powder | Protein powder for kids

Egg Malai Masala | Easy step by step recipe

Chicken Chukka Chettinad Style | How to make Chicken Curry | செட்டினாட் சிக்கன் சுக்கா

Easy Wheat Biscuit recipe | Crispy & Crunchy Snacks | Ladies Glitz

Chicken 65 recipe | Authentic Indian recipes | Ladies Glitz

Vegetable Cutlet | Crunchy & Crispy Recipe by Ladies Glitz

Chocolate Milkshake | Banana Milkshake | Easy & yummy tasting milkshake recipes

Easy art & craft using Egg shells & Newspaper | Art from waste material to useful | Home decor ideas

Chapathi Veg Roll | Kids Veg Wrap | Ladies Glitz

Easy idli podi recipe | Idli milagai podi in tamil | இட்லி பொடி | Milagai podi recipe

Snack ideas for children | கடலைமாவு முட்டை ஆம்லெட் | Everyday snacks recipe -1

Ghee at home | Homemade Pure Ghee in Tamil | 100% சுத்தமான நெய் - வீட்டிலேயே தயாரிப்பது எப்படி

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து