முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆவின் பச்சை நிற பால் பாக்கெட் விலை உயர்த்தப்பட்டுள்ளதா..? தமிழ்நாடு அரசு விளக்கம்

புதன்கிழமை, 7 ஜனவரி 2026      தமிழகம்
Aavin-2023-11-02

சென்னை, ஆவின் பால் விலை லிட்டருக்கு ரூ.3 குறைக்கப்படும் என்ற வாக்குறுதியை நிறைவேற்றாமல் இருமடங்கு (ரூ.6) விலை உயர்த்தப்பட்டிருப்பதாக சமூக வலைத்தளங்களில் ஒரு பதிவு பகிரப்பட்டு வருகிறது. இதன் உண்மை நிலை என்ன? என்பது குறித்து தமிழ்நாடு தகவல் சரிபார்ப்பகம் விளக்கம் அளித்துள்ளது. 

அதில் கூறப்பட்டுள்ளதாவது:

கடந்த 2021-ம் ஆண்டு தமிழ்நாடு முதல்-அமைச்சராக மு.க.ஸ்டாலின் அவர்கள் பொறுப்பேற்றவுடன் ஆவின் பால் விலை லிட்டருக்கு 3 ரூபாய் குறைக்கப்பட்டது. தற்போது ஆவின் நிறுவனம் அறிமுகப்படுத்தியிருப்பது கிரீன் மேஜிக் பிளஸ் என்ற புதிய வகை பால் பாக்கெட்டாகும். இதில் கூடுதலாக வைட்டமின் ஏ மற்றும் டி செறிவூட்டப்பட்டு உள்ளதுடன் கொழுப்புச் சத்து: 4.5 சதவீதம், இதரச் சத்துக்கள்: 9 சதவீதம் S.N.F. உயர்த்தப்பட்டு உள்ளது. 

கொழுப்புச் சத்து: 4.5 சதவீதம் மற்றும் இதரச் சத்துக்கள்: 8.5 சதவீதம் S.N.F கொண்ட பழைய ஆவின் கிரீன் மேஜிக் நிலைப்படுத்தப்பட்ட பால் பாக்கெட் தற்போதும் அதே விலையில் கடைகளில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதன் உற்பத்தியும் நிறுத்தப்படவில்லை. தவறான தகவலைப் பரப்பாதீர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 7 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 9 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 9 months ago
View all comments

வாசகர் கருத்து