முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

செவ்வாய் கிரகத்தின் மிகப்பெரிய நிலவை மிக நெருக்கத்தில் படம் பிடித்த மங்கல்யான்

சனிக்கிழமை, 4 ஜூலை 2020      இந்தியா
Image Unavailable

Source: provided

பெங்களூரு : செவ்வாய் கிரகத்தின் மிகப்பெரிய நிலவான போபோஸை மங்கள்யான் மிக நெருக்கத்தில் படம் பிடித்து உள்ளது.

செவ்வாய் கிரகத்தை ஆராய்ச்சி செய்வதற்காக மங்கள்யான் என்ற விண்கலம் (ஆர்பிட்டர் மிஷன்) பி.எஸ்.எல்.வி- சி25 ராக்கெட் மூலம் சென்னையை அடுத்த ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து 2013-ம் ஆண்டு நவம்பர் மாதம் 5-ம் தேதி விண்ணில் செலுத்தப்பட்டது.  இதன் மூலம் முதல் முயற்சியிலேயே செவ்வாய்க்கு விண்கலத்தை வெற்றிகரமாக அனுப்பிய முதல் நாடு என்ற பெருமை இந்தியாவுக்கு கிடைத்தது. 

சுமார் 10 மாத காலத்துக்கு பின்னர் அது 2014-ம் ஆண்டு, செப்டம்பர் மாதம் 24-ம் தேதி செவ்வாயின் சுற்றுப்பாதையை சென்றடைந்தது. தற்போது செவ்வாய் கிரகத்தை சுற்றி வருகிறது. இந்த விண்கலம், 6 மாத கால ஆயுளுடன் வடிவமைக்கப்பட்டது. ஆனால் அது 6 ஆண்டு காலத்தை வெற்றிகரமாக கடந்து விட்டது.

செவ்வாய் கிரகத்தின் மிக நெருக்கமான மற்றும் மிகப்பெரிய நிலவு போபோஸின் படத்தை இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் (இஸ்ரோ) மார்ஸ் ஆர்பிட்டர் மிஷன் படம் பிடித்து உள்ளது.  ஜூலை 1-ம் தேதி மார்ஸ் ஆர்பிடர் மிஷன் செவ்வாய் கிரகத்தில் இருந்து 7,200 கி.மீ தொலைவிலும், போபோஸிலிருந்து 4,200 கி.மீ தூரத்திலும் இருந்தபோது இந்த  படம் எடுக்கப்பட்டுள்ளது. போபோஸ் பெரும்பாலும் கார்பனேசிய காண்டிரைட்டுகளால் ஆனது என்று நம்பப்படுகிறது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து