கொரோனா உருவானது பற்றிய விசாரணை : சீனாவுடன் உலக சுகாதார அமைப்பு பேச்சு

புதன்கிழமை, 5 ஆகஸ்ட் 2020      உலகம்
World Health 2020 07 29

Source: provided

பெய்ஜிங் : கொரோனா உருவானது பற்றிய விசாரணையில் சீனாவுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக சீன வெளியுறவு அமைச்சக செய்தித்தொடர்பாளர் வாங் வென்பின் தெரிவித்தார்.

சீனாவில் உகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டது. இந்த வைரஸ் உருவானது பற்றி விசாரணை நடத்த உலக சுகாதார அமைப்பு முன்வந்துள்ளது.

அதற்காக, 2 நிபுணர்கள் கொண்ட குழுவை சீனாவுக்கு அனுப்பி வைத்துள்ளது.  அந்த நிபுணர்கள், சீனாவுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் வாங் வென்பின் தெரிவித்தார்.

விலங்குகள் மூலமாக பரவியதா என்பது பற்றியும் விவாதித்தனர்.  விஞ்ஞான ரீதியான விசாரணையில் சீனாவின் ஒத்துழைப்பு பற்றியும் அவர்கள் ஆலோசனை நடத்தினர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து