முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஷ்ரேயாஸ் குறித்து பி.சி.சி.ஐ.

புதன்கிழமை, 29 அக்டோபர் 2025      விளையாட்டு
ICC 2023 08 04

Source: provided

பி.சி.சி.ஐ. செயலாளர் தேவஜித் சைகியா அளித்த விளக்கத்தில் தெரிவித்திருப்பதாவது: “ஷ்ரேயாஸ் மிகமிக நன்றாக இருக்கிறார். மருத்துவர் எதிர்பார்த்ததைவிட அவர் மிக வேகமாக குணமடைந்து வருகிறார். அவர் முழுமையாக குணமடைய ஆறு முதல் எட்டு வாரங்கள் ஆகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மிக விரைவாக குணமடைந்து ஆச்சிரியத்தை ஏற்படுத்தியுள்ளார். அவர் தனது வழக்கமான பணிகளை செய்யத் தொடங்கியுள்ளார். அவரது காயம் மிகவும் ஆபத்தானது, ஆனால் அதிலிருந்து அவர் மீண்டுவிட்டார். தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்து சாதாரண அறைக்கு நேற்று மாற்றப்பட்டார்.

 

ஷ்ரேயாஸ் ஐயருக்கு அறுவை சிகிச்சை எதுவும் செய்யப்படவில்லை. ஆனால், மாற்று சிகிச்சை அளிக்கப்பட்டது. அதன்காரணமாக அவரின் உடல்நிலை மருத்துவர்கள் எதிர்பார்த்ததைவிட விரைவாக முன்னேற்றம் அடைந்துள்ளது. அவர் அனைவருடனும் நன்றாக பேசி, சிரித்துக் கொண்டுள்ளார். ஏற்கெனவே செவிலியர்களுடன் நகைச்சுவை செய்யத் தொடங்கிவிட்டார்” எனத் தெரிவித்தார்.

__________________________________________________________________________________________

இந்திய வீராங்கனை அபாரம்

கனடா மகளிர் ஓபன் ஸ்குவாஷ் தொடர் டொராண்டோவில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இந்தியாவின் 17 வயதான அனாஹெத் பங்கேற்று விளையாடி வருகிறார். இந்த தொடரின் காலிறுதி போட்டியில் இந்தியாவின் அனாஹெத், மற்றும் நடப்பு சாம்பியனான பெல்ஜியத்தின் டின்னே கில்லிஸ் உடன் மோதினார். இந்த ஆட்டத்தில் அனாஹெத் 12-10, 11-9, 11-9 என்ற நேர் செட்களில் கில்லிஸை தோற்கடித்து அரையிறுதிக்கு முன்னேறினார்.

இதன் மூலம் 43-வது இடத்தில் உள்ள வீராங்கனை அனாஹெத் 7-வது இடத்தில் உள்ள வீராங்கனையை 3-0 என்ற கணக்கில் வீழ்த்தி வரலாறு படைத்துள்ளார். இது அவரது வாழ்க்கையில் மிகப்பெரிய வெற்றியாகும். மேலும் முதல் 10 வீராங்கனைக்கு எதிரான முதல் வெற்றியாகும். காலிறுதிக்கு முந்தைய சுற்றில் உலகின் 20-ம் நிலை வீராங்கனை பிரான்சின் மெலிசா ஆல்வ்ஸையும் இவர் வீழ்த்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

______________________________________________________________________________________

தென் ஆப்பிரிக்கா வெற்றி

தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட், தலா 3 போட்டிகள் கொண்ட டி20 மற்றும் ஒருநாள் தொடரில் விளையாடுகிறது. இதில் முதலில் நடைபெற்ற டெஸ்ட் தொடர் 1-1 என்ற கணக்கில் சமனில் முடிந்தது. இதனையடுத்து பாகிஸ்தான்- தென் ஆப்பிரிக்கா இடையிலான முதல் டி20 போட்டி ராவல்பிண்டியில் நடைபெற்றது. இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. அதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணியின் கேப்டன் சல்மான் ஆகா பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி தென் ஆப்பிரிக்கா அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்கம் முதல் தென் ஆப்பிரிக்கா வீரர்கள் அதிரடியாக விளையாடி ரன்கள் குவித்தனர். 

இதனால் தென் ஆப்பிரிக்கா அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 194 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் சிறப்பாக விளையாடி ரீசா ஹென்ரிக்ஸ் 60 ரன்கள் எடுத்தார். ஜார்ஜ் லிண்டே 36 ரன்கள் எடுத்தார். தொடர்ந்து 195 ரன்கள் இலக்குடன் விளையாடிய பாகிஸ்தான் அணி தென் ஆப்பிரிக்காவின் பந்துவீசை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது.இதனால் பாகிஸ்தான் அணி 18.1 ஓவர்களில் 139 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது. தென் ஆப்பிரிக்கா அணி 55 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியால் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் தென் ஆப்பிரிக்கா 1-0 என முன்னிலை பெற்றுள்ளது.  

_____________________________________________________________________________________________

மெஸ்சியின் புதிய விருப்பம்

48 அணிகள் பங்கேற்கும் 23-வது உலகக் கோப்பை கால்பந்து போட்டி அடுத்த ஆண்டு (2026) ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் அமெரிக்கா, மெக்சிகோ, கனடா ஆகிய நாடுகளில் நடைபெறுகிறது. இதில் நடப்பு சாம்பியனான அர்ஜென்டினா அணியின் கேப்டன் லயோனல் மெஸ்சி விளையாடுவாரா? அல்லது உடல்தகுதியை காரணம் காட்டி ஒதுங்கி விடுவாரா? என தொடர்ச்சியாக எழுந்த கேள்விகளுக்கு அவரே தற்போது விடை அளித்துள்ளார். 38 வயதான மெஸ்சி அளித்த ஒரு பேட்டியில்,

‘உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் விளையாடுவது மகத்தானது. நானும் அதில் பங்கெடுக்கவே விரும்புகிறேன். நான் நல்ல உடல்தகுதியுடன் தேசிய அணிக்கு எனது பங்களிப்பை அளிப்பது முக்கியமானதாகும். நான் 100 சதவீதம் உடல் தகுதியுடன் இருக்கிறேனா என்பதை பார்க்க வேண்டும். என்னால் பங்களிக்க முடியும் என்று நினைத்தால், அதன் பிறகு உலகக் கோப்பையில் ஆடுவது குறித்து முடிவு செய்வேன். உண்மையில் நான் உலகக் கோப்பையில் ஆட ஆவலாக இருக்கிறேன். இந்த முறை நாங்கள் நடப்பு சாம்பியன் அந்தஸ்துடன் இறங்கப்போகிறோம். அதனை தக்கவைக்க முடிந்தால், அற்புதமாக இருக்கும்’ என்றார். 

_______________________________________________________________________________________

சூர்யகுமார் தாயார் பிராத்தனை 

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக கடந்த சனிக்கிழமை சிட்னியில் நடந்த 3-வது மற்றும் கடைசி ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த ஆட்டத்தின் போது இந்திய அணியின் துணை கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயருக்கு காயம் ஏற்பட்டது. அதில் அவரது இடது கீழ் விலாஎலும்பு பகுதியில் காயமடைந்திருப்பதாகவும், அதற்கு சிகிச்சை அளிக்கப்படுவதாகவும் கிரிக்கெட் வாரியம் தரப்பில் தெரிவிக்கப்பட்டு இருந்தது. அதன்பிறகு சிட்னியில் உள்ள ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை பிரிவில் (ஐ.சி.யூ.) ஷ்ரேயாஸ் ஐயர் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று காலை சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டார்.

அவரது உடல்நிலை சீராக இருப்பதாகவும் இன்னும் சில நாட்களில் மருத்துவமனையில் இருப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர் சீக்கிரம் நலம் பெற ரசிகர்கள் பிரார்த்தனை செய்து வருகின்றனர். இந்நிலையில் சத் பூஜையின் போது ஷ்ரேயாஸ் ஐயர் குணமடைய இந்திய டி20 அணியின் கேப்டன் சூர்யகுமாரின் தாயார் பிரார்த்தனை செய்துள்ளார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 5 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 7 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 7 months ago
View all comments

வாசகர் கருத்து