முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மாணவர்களை விளையாட்டுத் துறையில் சாதிக்க ஊக்குவிக்கும் அரசு: அமைச்சர்

புதன்கிழமை, 29 அக்டோபர் 2025      தமிழகம்
Anbil 1

Source: provided

தஞ்சை : விளையாட்டுத்தானே என்று எண்ணாமல் மாணவர்கள், விளையாட்டையும் வாழ்க்கைத் தொழிலாக மாற்ற முதல்வர் ஸ்டாலின் நடவடிக்கை எடுத்து வருவதாக அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார்.

66 வது குடியரசு தின மாநில அளவிலான தடகள போட்டிகள் தொடங்கி வைக்கப்பட்டன. இதில் கலந்து கொண்டு பேசிய அமைச்சர் அன்பில் மகேஸ், மாணவ - மாணவிகளை அரசு வேலையில் அமர்த்துவதற்கான அனைத்து முயற்சிகளை துணை முதல்வர் உதயநிதி மேற்கொண்டு வருகின்றார் எனக் கூறினார். தஞ்சாவூர் அன்னை சத்தியா விளையாட்டு அரங்கில் 66-ஆவது குடியரசு தின மாநில அளவிலான தடகளப் போட்டிகள் நேற்று தொடங்கியது. வரும் மூன்றாம் தேதி வரை நடைபெறும் இந்த போட்டியை பள்ளி கல்வித்துறை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி, உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.

தஞ்சாவூர், சென்னை, நாமக்கல், நீலகிரி, கன்னியாகுமரி, சேலம், திருப்பத்தூர், கோவை, உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த சுமார் 2,000க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் இந்த போட்டியில் கலந்து கொண்டுள்ளனர். நேற்று முதல் வருகிற 3- ஆம் தேதி வரை மாணவிகளுக்கும் நவ.1 ஆம் தேதி முதல் 3ஆம் தேதி வரை மாணவர்களுக்குமான இந்த தடகளப் போட்டி நடைபெற உள்ளது. 100 மீட்டர் ஓட்டப்பந்தயம், 400 மீட்டர் ஓட்டப்பந்தயம், உயரம் தாண்டுதல், ஈட்டி எறிதல், குண்டு எறிதல், நீளம் தாண்டுதல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் நடைபெறும் இந்த போட்டியில் மாணவ - மாணவிகள் கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தி வருகின்றனர்.

பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அமைச்சர், பள்ளி மாணவ - மாணவிகள் விளையாட்டு துறையில் தேசிய அளவில் தங்க பதக்கங்களை வென்று வருகின்றனர். தொடர்ந்து அவர்களை ஊக்குவிப்பு செய்வதற்கான கல்வித்துறை பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. விளையாட்டு துறை மூலம் மாணவ மாணவிகளை நேரடியாக அரசு வேலை அமர்த்துவதற்கான அனைத்து வேலைகளையும் துணை முதலமைச்சர் செய்து வருகிறார். இது விளையாட்டு தானே என்று எண்ணாமல் - இதையும் வாழ்க்கைத் தொழிலாக மாற்ற முதலமைச்சர் நடவடிக்கை எடுத்து வருவதாக அவர் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 5 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 7 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 7 months ago
View all comments

வாசகர் கருத்து