முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

எப்போதும் முழு உடல்தகுதியுடன் தயாராக இருக்க வேண்டும்: ஷமி

புதன்கிழமை, 29 அக்டோபர் 2025      விளையாட்டு
Mohammed-Shami 2023-11-03

Source: provided

மும்பை : இந்திய அணிக்காக விளையாட எப்போதும் முழு உடல்தகுதியுடன் தயாராக இருக்க வேண்டும் என்பதே தன்னுடைய நோக்கம் என வேகப் பந்துவீச்சாளர் முகமது ஷமி தெரிவித்துள்ளார்.

15 விக்கெட்டுகள்...

இந்திய அணியின் மூத்த வேகப் பந்துவீச்சாளர்களில் ஒருவரான முகமது ஷமி ரஞ்சி கோப்பைத் தொடரில் விளையாடி வருகிறார். ரஞ்சி கோப்பைத் தொடரின் முதல் இரண்டு போட்டிகளில் அபார பந்துவீச்சை வெளிப்படுத்திய முகமது ஷமி, 15 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தியுள்ளார். இரண்டாவது போட்டியில் 8 விக்கெட்டுகளைக் கைப்பற்றி பெங்கால் அணி 141 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத் அணியை வீழ்த்த உதவினார்.

உடல்தகுதியுடன்....

இந்த நிலையில், இந்திய அணிக்காக விளையாட எப்போதும் முழு உடல்தகுதியுடன் தயாராக இருக்க வேண்டும் என்பதே தன்னுடைய நோக்கம் என வேகப் பந்துவீச்சாளர் முகமது ஷமி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் பேசியதாவது: பந்துவீச்சில் சிறப்பாக செயல்படுவதற்கு நிறைய கடின உழைப்பைக் கொடுத்துள்ளேன். அதிர்ஷ்டமும் சிறிது தேவை என்பதை நான் நம்புகிறேன். ஒவ்வொரு வீரரும் தங்களது நாட்டுக்காக விளையாட வேண்டும் என விரும்புவார்கள். அதனால், இந்திய அணிக்காக மீண்டும் விளையாட தயாராக இருக்கிறேன். இந்திய அணிக்காக விளையாட எப்போதும் முழு உடல் தகுதியுடன் இருக்க வேண்டும் என்பதே என்னுடைய நோக்கம். ஆடுகளத்தில் தொடர்ந்து சிறப்பாக செயல்படுவேன். இந்திய அணியில் இடம்பெறுவதும், இடம்பெறாததும் தேர்வுக்குழுவினரின் கைகளில் உள்ளது என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 5 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 7 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 7 months ago
View all comments

வாசகர் கருத்து