தமிழகத்தில் மேலும் 3,536 பேருக்கு கொரோனா

திங்கட்கிழமை, 19 அக்டோபர் 2020      தமிழகம்
Radhakrishnan 2020 10 19

Source: provided

சென்னை : தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொடர்பான தகவல்களை மாநில சுகாதாரத்துறை வெளியிட்டது.

அதன்படி, தமிழகத்தில் நேற்று 3 ஆயிரத்து 536 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாநிலத்தில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 6 லட்சத்து 90 ஆயிரத்து 936 ஆக அதிகரித்துள்ளது.

வைரஸ் பரவியவர்களில் நேற்று ஒரே நாளில் 4 ஆயிரத்து 515 பேர் சிகிச்சைக்கு பின் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 6 லட்சத்து 42 ஆயிரத்து 152 ஆக உயர்ந்துள்ளது.

ஆனாலும் வைரஸ் தாக்குதலுக்கு நேற்று ஒரே நாளில் 49 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் தமிழகத்தில் வைரஸ் தாக்குதலுக்கு பலியானோர் எண்ணிக்கை 10 ஆயிரத்து 691 ஆக அதிகரித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து