புஜாரா, விஹாரி, சப்போர்ட் ஸ்டாஃப்கள் துபாய் சென்றடைந்தனர்

திங்கட்கிழமை, 26 அக்டோபர் 2020      விளையாட்டு
Pujara-vihari 2020 10 26

Source: provided

துபாய் : கொரோனா காலத்திற்குப் பிறகு இந்திய கிரிக்கெட் அணி தற்போது வரை சர்வதேச கிரிக்கெட் போட்டியில் விளையாடாமல் உள்ளது. தற்போது ஐ.பி.எல். போட்டி நடைபெற்று வருகிறது. பெரும்பாலான வீரர்கள் செக்யூர் பாதுகாப்புடன் விளையாடி வருகிறார்கள். 

ஐ.பி.எல் தொடர் நவம்பர் 10-ந்தேதி முடிவடைகிறது. அதன்பின் இந்திய அணி ஆஸ்திரேலியா சென்று ஒருநாள், டி20 மற்றும் டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. நவம்பர் 27-ந்தேதி முதல் ஜனவரி 19-ந்தேதி வரை தொடர் நடைபெறுகிறது. 

ஐ.பி.எல். போட்டிக்கும் ஆஸ்திரேலியா தொடருக்கும் இடையில் 17 நாட்களே உள்ளது. இதற்கிடையில் ஆஸ்திரேலியா சென்ற தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும். இதனால் துபாயில் இருந்து இந்திய அணி அப்படியே ஆஸ்திரேலியா புறப்படுகிறது.

டெஸ்ட் போட்டிக்கான புஜாரா, விஹாரி ஐபிஎல் தொடரில் விளையாடவில்லை. இவர்களுடன் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, பேட்டிங் பயிற்சியாளர் விக்ரம் ரதோர், பவுலிங் கோச்சர் பரத் அருண், பீல்டிங் கோச்சர் ஆர் ஸ்ரீதர் ஆகியோரும் ஐ.பி.எல். தொடரில் ஈடுபடவில்லை.

இவர்கள் அனைவரும் இந்தியாவில் இருந்து புறப்பட்டனர். இவர்கள் துபாயில் சென்றடைந்து 6 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள். அதன்பின் வழக்கான கொரோனா பரிசோதனைக்குப்பின் ஐபிஎல் போட்டிக்கிடையே பயிற்சியில் கலந்து கொள்வார்கள். ஆனால் ஐபிஎல் பயோ-பப்பிள் இடத்திற்குள் அனுமதிகப்படமாட்டார்கள். பின்னர் ஆஸ்திரேலியா செல்லும் அணியுடன் இணைந்து கொள்வார்கள்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து