சோனியா தலைமையில் காங். செயற்குழு இன்று கூடுகிறது

வியாழக்கிழமை, 21 ஜனவரி 2021      அரசியல்
sonia-gandhi-2021 01 21

காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டம் இன்று சோனியா காந்தி தலைமையில் நடைபெற உள்ளது.

பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் வரும் 29-ம் தேதி தொடங்குகிறது. அந்த கூட்டத்தில் எத்தகைய பிரச்சனைகளை எழுப்ப வேண்டும் என்பது பற்றி ஆய்வு செய்ய காங்கிரஸ் கட்சி முடிவு செய்துள்ளது.  இன்று (வெள்ளிக்கிழமை) காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டம் சோனியா காந்தி தலைமையில் நடைபெற உள்ளது.  காணொலி காட்சி மூலம் நடைபெறும் இந்த கூட்டத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர்களுடன் சோனியா பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசனை நடத்த உள்ளார். குறிப்பாக காங்கிரஸ் உள்கட்சி தேர்தலை எப்போது, எப்படி நடத்துவது என்பது பற்றி ஆலோசனை நடத்தப்படுகிறது.  காங்கிரசுக்கு புதிய தலைவரை தேர்வு செய்ய வேண்டும் என்று மூத்த தலைவர்களில் சிலர் வலியுறுத்தியபடி உள்ளனர். எனவே காங்கிரசுக்கு நிரந்தரமாக புதிய தலைவரை தேர்வு செய்வது பற்றியும் இன்றைய கூட்டத்தில் ஆலோசித்து முடிவு எடுக்கப்படலாம் எனத் தெரிகிறது. மேலும் விவசாயிகள் போராட்டம்,  5 மாநில தேர்தலை எதிர்கொள்வது மற்றும் பாராளுமன்றத்தில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பது பற்றியும் இன்றைய கூட்டத்தில் முடிவு எடுக்கப்படும் எனத் தெரிகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து