தங்கம் விலை சவரன் ரூ.320 அதிகரிப்பு

வியாழக்கிழமை, 21 ஜனவரி 2021      வர்த்தகம்
Gold-price 2020-11-10

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 320 ரூபாய் உயர்ந்து 37 ஆயிரத்து 528 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. 

சென்னையில் தங்கம் விலையானது கடந்த 2 வாரமாக குறைந்து வந்த நிலையில், தற்போது மீண்டும் அதிகரிக்க தொடங்கியிருக்கிறது. இதன் தொடா்ச்சியாக சென்னையில் நேற்று முன்தினம் ஆபரணத்தங்கத்தின் விலை ரூ. 37,208-க்கு விற்பனை செய்யப்பட்டது.  இந்த நிலையில், சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று கிராமுக்கு ரூ. 40 உயர்ந்து ரூ.4,691-க்கு விற்பனையானது. அதன் படி, சவரனுக்கு ரூ. 320 உயர்ந்து ரூ.37,528-க்கு விற்பனையானது. மேலும், வெள்ளி விலை கிராமுக்கு ரூ.1.20 அதிகரித்து ஒரு கிராம் வெள்ளி ரூ.72.50-க்கும் ஒரு கிலோ வெள்ளி ரூ.72,500-க்கும் விற்பனையானது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து