வரும் 23-ம் தேதி முதல் 25-ம் தேதி வரை ராகுல் காந்தி கோவையில் பிரச்சாரம்: கே.எஸ்.அழகிரி

வியாழக்கிழமை, 21 ஜனவரி 2021      அரசியல்
rahul-gandhi 2021 01 21

ராகுல் காந்தி வரும் 23-ம் தேதி முதல் 25-ம் தேதி வரை கோவை மேற்கு மண்டலத்தில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்கிறார் என்று மாநில காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கூறினார்.

கோவை கோபாலபுரம் பகுதியில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி செய்தியாளர்களிடம் நேற்று (21-ம் தேதி) கூறியதாவது:- 

அகில இந்திய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி எம்.பி வரும் 23-ம் தேதி முதல் 25-ம் தேதி வரை கோவை மேற்கு மண்டலத்தில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்கிறார். தமிழ்நாட்டில் ராகுல்காந்தி 5 முறை சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார்.  கூட்டணியில் எல்லோரும் பகிர்ந்து கொள்வது தான் சிறப்பு. கூட்டணி கட்சிகளுக்கு இடையே கொள்கை ரீதியில் வெவ்வேறு வேறுபாடுகள் உள்ளன.  மதச்சார்பின்மை என்ற ஒற்றை நேர்கோட்டில் நாங்கள் கூட்டணியில் இணைந்துள்ளோம். எங்களது கூட்டாணியில் உள்ள இதுபோன்ற சிறு சிறு பிரச்சனை பேசி தீர்த்துக் கொள்வோம்.   வெற்றி வாய்ப்பு மற்றும் சூழலுக்கு ஏற்ப காங்கிரஸ் தொகுதிகளை கேட்கும்.  கமல்ஹாசனால் எங்களது கூட்டணி வாக்கு வங்கி பாதிக்க கூடாது என நினைக்கிறோம். 

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் 7 பேர் விடுதலை செய்யப்பட்டால் அதை காங்கிரஸ் எதிர்க்கவும் செய்யாது. ஆதரிக்கவும் செய்யாது. நீதிமன்றம் யாரை வேண்டுமானாலும் மன்னித்து விடுதலை செய்யலாம். அவர்களை விடுதலை செய்ய வேண்டும் என அரசியல் கட்சிகள் வலியுறுத்துவதை ஏற்க முடியாது. இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து