புதுடெல்லி : விளம்பரத்திற்காகவே மும்பையில் விவசாயிகள் பேரணி நடத்தியதாக மத்திய அமைச்சர் ராம்தாஸ் அதவாலே குற்றம் சாட்டி உள்ளார்.
வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி மும்பையில் விவசாயிகள் பிரமாண்ட பேரணி நடத்தினர். கவர்னரை சந்திக்க முடியாததால் ஆவேசம் அடைந்த அவர்கள் கோரிக்கை மனுவை கிழித்தெறிந்தனர்.
இதற்கிடையே மும்பையில் விளம்பரத்துக்காக விவசாயிகள் போராட்டம் நடத்தப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் ராம்தாஸ் அதவாலே குற்றம் சாட்டி உள்ளார்.
மத்திய அமைச்சரின் இந்த கருத்துக்கு தேசியவாத காங்கிரஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும் விவசாயிகளை அவமானப்படுத்தியதற்காக அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளது.