முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ராமர் குறித்து பேசியதால் ஆட்சியை இழந்தேன்: நேபாள முன்னாள் பிரதமர்

வெள்ளிக்கிழமை, 12 செப்டம்பர் 2025      உலகம்
KP-Sharma-Oli 2025-09-09

Source: provided

காத்மாண்டு : ராமரின் பிறப்பிடம் குறித்து பேசியதால் ஆட்சியை இழந்தேன் என்று நேபாள முன்னாள் பிரதமர் சர்மா ஒலி தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் அண்டை நாடுகளில் ஒன்றான நேபாளத்தில் ஆட்சியாளர்கள் மீதான ஊழல் குற்றச்சாட்டுகள், அந்நாட்டின் குடிமக்கள் மத்தியில் பெரும் கோபத்தை ஏற்படுத்தி இருந்தது. இது தொடர்பாக சமூக வலைத்தளங்களில் ஊழல் ஒழிப்பு பிரசாரங்களை மேற்கொண்டு வந்தனர்.

இது நேபாள அரசுக்கு நெருக்கடியை ஏற்படுத்தி வந்த நிலையில், பதிவு செய்யாத சமூக வலைத்தளங்களை நேபாள அரசு கடந்த 4-ந்தேதி நள்ளிரவு முதல் தடை செய்தது. இது இளம் தலைமுறையினர் மத்தியில் மேலும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதனால் மாணவர்கள், இளைஞர்களை கொண்ட இளம் தலைமுறையினர் தலைநகர் காத்மாண்டுவில் மாபெரும் போராட்டம் நடத்தினர். 

ஆட்சியாளர்களின் ஊழல் மற்றும் சமூக வலைத்தள தடையை கண்டித்து அவர்கள் நடத்திய இந்த போராட்டத்தில் வன்முறை வெடித்தது. போலீசார் தடியடி, கண்ணீர் புகை குண்டுவீச்சு நடத்தியும் போராட்டத்தை கட்டுப்படுத்த முடியாததால் துப்பாக்கி சூடு நடத்தினர். இதில் 19 பேர் கொல்லப்பட்டனர். பாதுகாப்பு படையினர் உள்பட 300-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

இதைத்தொடர்ந்து தலைநகரின் பல பகுதிகளில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு, ராணுவம் குவிக்கப்பட்டது. இந்த போராட்டம் மற்றும் வன்முறையை தொடர்ந்து நேபாள பிரதமர் சர்மா ஒலி பதவி விலகினார். இதைத் தொடர்ந்து ராணுவம் களத்தில் இறங்கி, நாட்டின் பாதுகாப்பு பணிகளை தங்கள் பொறுப்பில் எடுத்துக்கொண்டது. 

முன்னதாக சர்மா ஒலி, இந்து கடவுள் ராமரின் பிறப்பிடம் குறித்து சர்ச்சையான கருத்துகளை பேசியிருந்தார். ராமர் அயோத்தியில் பிறக்கவில்லை என்றும், அவர் நேபாளத்தில்தான் பிறந்தார் என்றும் கூறியிருந்தார். அவரது பேச்சுக்கு இந்திய அரசியல் தலைவர்கள் பலர் கண்டனம் தெரிவித்திருந்தனர். 

இந்நிலையில், ராமரின் பிறப்பிடம் குறித்து பேசியதால் ஆட்சியை இழக்க நேரிட்டதாகவும், தனது வெளியேற்றத்திற்கு பின்னால் இந்தியாவின் திட்டம் உள்ளது என்றும் சர்மா ஒலி குற்றம் சாட்டியுள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago
View all comments

வாசகர் கருத்து