முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சச்சின் டெண்டுகள் தரப்பு மறுப்பு

வெள்ளிக்கிழமை, 12 செப்டம்பர் 2025      விளையாட்டு
Tendulkar 2025-01-17

Source: provided

பி.சி.சி.ஐ. புதிய தலைவராக இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கர் நியமிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியானது. இந்நிலையில், சச்சின் டெண்டுல்கரின் எஸ்.ஆர்.டி ஸ்போர்ட்ஸ் மேனேஜ்மேன்ட் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

பி.சி.சி.ஐ தலைவர் பதவிக்கு சச்சின் தெண்டுல்கர் பரிசீலிக்கப்படுவதாகவோ அல்லது பரிந்துரைக்கப்படுவதாகவோ சில தகவல்கள், வதந்திகள் பரவி வருவதாக எங்கள் கவனத்திற்கு வந்திருக்கிறது. ஆனால், அப்படி எதுவும் இல்லை என்பதை தெரிவித்து கொள்கிறோம். ஆதாரமற்ற ஊகங்களுக்கு நம்பகத்தன்மை அளிப்பதைத் தவிர்க்குமாறு சம்பந்தப்பட்ட அனைவரையும் கேட்டுக் கொள்கிறோம் என தெரிவித்துள்ளது.

_____________________________________________________________________________________________________

இந்திய அணிக்கு கபில்தேவ் அறிவுரை

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரை வெற்றியுடன் தொடங்கியுள்ள இந்திய அணி, அதன் அடுத்தப் போட்டியில் நாளை (செப்டம்பர் 14 ஆம் தேதி) பாகிஸ்தானை எதிர்கொள்கிறது. இந்த நிலையில், இந்திய அணி சிறப்பாக செயல்படுவதில் கவனம் செலுத்த வேண்டும் எனவும், வெளிப்புற காரணிகளால் வீரர்களின் கவனம் சிதறக்கூடாது எனவும் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கபில் தேவ் தெரிவித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.

இது தொடர்பாக அவர் தெரிவிக்கையில், இந்திய அணி வீரர்கள் போட்டியில் மட்டும் தங்களது முழு கவனத்தையும் செலுத்த வேண்டும். இந்தியாவிடம் நல்ல அணி இருக்கிறது. பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இந்திய அணி கண்டிப்பாக வெற்றி பெற வேண்டும். மற்ற விஷயங்களுக்கு கவனம் கொடுக்காமல் வீரர்கள் சிறப்பாக செயல்படுவதில் மட்டுமே கவனம் செலுத்த வேண்டும். நன்றாக விளையாடி வெற்றி பெறுங்கள்.இந்திய அணி ஆசிய கோப்பை வெல்லும் என்ற நம்பிக்கை உள்ளது என்றார்.

_____________________________________________________________________________________________________

நடுவர்கள் பட்டியலில் தமிழகர்கள்

13-வது மகளிர் 50 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியா மற்றும் இலங்கையில் வருகிற 30-ந் தேதி முதல் நவம்பர் 2-ந் தேதி வரை நடக்கிறது. இந்தியாவில் மகளிர் உலகக்கோப்பை அரங்கேறுவது இது 4-வது முறையாகும். 

இந்நிலையில் இந்த தொடரில் பணியாற்றும் நடுவர்களின் பட்டியலை ஐ.சி.சி. வெளியிட்டுள்ளது. அதன்படி இந்த உலகக்கோப்பை போட்டியில் பணியாற்றும் நடுவர்கள் அனைவரும் மகளிர்களாக இருப்பார்கள் என ஐ.சி.சி. அறிவித்துள்ளது.  இவர்களில் ஜனனியும், காயத்ரியும் தமிழகத்தை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்க அம்சமாகும்.

_____________________________________________________________________________________________________

இறுதிக்கு முன்னேறுமா இந்திய அணி?

11-வது மகளிர் ஆசிய கோப்பை ஆக்கி போட்டி சீனாவின் ஹாங்சோவ் நகரில் நடந்து வருகிறது. இதில் நடந்த ஆட்டம் ஒன்றில் முன்னாள் சாம்பியன்களான இந்தியா- சீனா அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய சீனா 4-1 என்ற கோல் கணக்கில் இந்தியாவை தோற்கடித்து 2-வது வெற்றியுடன் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது.

இன்று நடைபெறும் கடைசி லீக் ஆட்டத்தில் இந்திய அணி, ஜப்பானுடன் (பிற்பகல் 2.15 மணி) மல்லுகட்டுகிறது. 3 புள்ளியுடன் உள்ள இந்திய அணி இதில் வெற்றி பெற்றால் சிக்கலின்றி இறுதிப்போட்டிக்குள் நுழையும். குறைந்தது ‘டிரா’ வாவது செய்ய வேண்டும். மாறாக தோல்வியடைந்தால் வெளியேற வேண்டியதுதான். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago
View all comments

வாசகர் கருத்து