முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பிளஸ்-2 தேர்வில் தேர்ச்சி பெற்ற 77 வயது மூதாட்டி

வெள்ளிக்கிழமை, 12 செப்டம்பர் 2025      இந்தியா
Exam 2024-11-26

Source: provided

பாலக்காடு : பிளஸ்-2 தேர்வில் 77 வயது மூதாட்டி தேர்ச்சி பெற்றார்.

பாலக்காடு மாவட்டம் அலனல்லூர் அருகே பாண்டிக்காடு பகுதியை சேர்ந்தவர் ஸ்ரீதேவி (வயது 77). இவரது கணவர் ராமச்சந்திரன். அவர் இறந்து விட்டார். இவர்களது மகன்கள் சுரேஷ்பாபு, ஜெயபிரகாஷ், மகள் ஸ்ரீலதா. ஸ்ரீதேவி, கடந்த 1968-ம் ஆண்டு பையப்பரம்பு உயர்நிலைப் பள்ளியில் படித்து எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு எழுதினார். இதில் 254 மதிப்பெண்கள் எடுத்து தேர்ச்சி பெற்றார். பின்னர் 19 வயதில் அவருக்கு திருமணமானது. இதனால் தனது படிப்பை நிறுத்தினார். இதையடுத்து அலனல்லூர் தீயணைப்பு நிலைய அதிகாரி பாரத்துறத் நாசர் கூறியதை அடுத்து, ஸ்ரீதேவிக்கு மீண்டும் படிக்க வேண்டும் என எண்ணம் தோன்றியது. அதுபற்றி அவர் தனது குடும்பத்தினரிடம் தெரிவித்தார். அதற்கு மகன்கள், மருமகள்கள், பேரன்கள் சம்மதம் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து அலனல்லூர் ஊராட்சி சாக் ஷரதா மிஷன் மூலம் பிளஸ்-1, பிளஸ்-2 படிக்க ஸ்ரீதேவிக்கு வாய்ப்பு கிடைத்தது.

பிளஸ்-2 பொதுத்தேர்வில் அவர் தனித்தேர்வராக கலந்துகொண்டு தேர்வு எழுதினார். இதன் முடிவுகள் நேற்று முன்தினம் வெளியானது. இதில் ஸ்ரீதேவி தேர்ச்சி பெற்று 1,200-க்கு 829 மதிப்பெண்கள் எடுத்தார். முதிர் வயதானாலும் ஆர்வமுடன் படித்து, தேர்ச்சி பெற்று உள்ளதால் மகிழ்ச்சி அடைந்தார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago
View all comments

வாசகர் கருத்து