முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வங்காளதேச பிரதமரை கொல்ல முயன்ற வழக்கில் 14 பேருக்கு மரண தண்டனை

புதன்கிழமை, 24 மார்ச் 2021      உலகம்
Image Unavailable

Source: provided

டாக்கா : வங்காளதேச பிரதமர் ஷேக் ஹசீனா கடந்த 2000-ம் ஆண்டில் கோபால்கஞ்ச் என்ற கிராமத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பங்கேற்கச் சென்றார். அப்போது மைதானத்தில் வெடிகுண்டு கண்டுபிடிக்கப்பட்டு, செயலிழக்கச் செய்யப்பட்டு பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. இது குறித்த விசாரணையில் பயங்கரவாதிகள் ஷேக் ஹசீனாவை படுகொலை செய்ய திட்டம் தீட்டி வெடி குண்டு வைத்தது தெரியவந்தது. 

ஏற்கனவே கடந்த 2017-ம் ஆண்டு இந்த வழக்கில் தொடர்புடைய 10 பேருக்கு மரண தண்டனையும், 9 பேருக்கு 20 ஆண்டு சிறை தண்டனையும் வழங்கி டாக்கா ஐகோர்ட்டு தீர்ப்பளித்தது. இதனிடையே இந்த வழக்கில் தொடர்புடைய மேலும் 14 பயங்கரவாதிகள் மீதான விசாரணை டாக்கா விரைவு விசாரணை கோர்ட்டில் நடந்து வந்தது. இந்த வழக்கின் இறுதி விசாரணை முடிந்தது. 

இதில் பயங்கரவாதிகள் 14 பேர் மீதான குற்றச்சாட்டுகள் அனைத்தும் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டன. அதனைத் தொடர்ந்து அவர்கள் 14 பேருக்கும் மரண தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து