முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்தியாவும், வங்கதேசமும் உலகம் அமைதியுடன் இருக்கவே விரும்புகிறது: பிரதமர் மோடி பேச்சு

சனிக்கிழமை, 27 மார்ச் 2021      உலகம்
Image Unavailable

Source: provided

டாக்கா : உலகம் அன்பு, அமைதி, நிலைத்தன்மையுடன் இருக்கவே இந்தியாவும் வங்காளதேசமும் விரும்புவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

வங்காளதேசத்தின் சுதந்திர பொன் விழாவில் (50-வது ஆண்டு) சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ளுமாறு அந்நாட்டு பிரதமர் ஷேக் ஹசீனா இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு அழைப்பு விடுத்தார்.  அந்த அழைப்பினை ஏற்று, பிரதமர் நரேந்திரமோடி 2 நாள் பயணமாக நேற்று முன்தினம் வங்காளதேசம் சென்றார். பின்னர் அவர் நேற்று முன்தினம் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். 

இந்நிலையில், சுற்றுப்பயணத்தின் இரண்டாவது நாளான நேற்று அந்நாட்டின் ஈஸ்வரிப்பூர் பகுதியில் உள்ள ஜேஷோரிஸ்வரி காளி கோவிலுக்கு சென்று வழிபாடு செய்தார். அதன்பின், ஒரஹண்டி மாகாணத்தின் கோபால்ஹன்ஞ்ச் பகுதியில் மதுவா சமூக மக்களிடம் உரையாற்றினார். அப்போது பிரதமர் மோடி பேசியதாவது:-

இந்த வாய்ப்புக்காக நான் பல ஆண்டுகளாக காத்திருந்தேன். 2015-ம் ஆண்டு நான் வங்காளதேசம் வந்தபோது ஒரஹண்டி பகுதிக்கு வர வேண்டும் என நினைத்தேன். அந்த ஆசை இன்று நிறைவேறியுள்ளது. இந்தியாவும் வங்காளதேசமும் தங்கள் சொந்த முன்னேற்றத்தின் மூலம் உலகம் முன்னேறுவதை காண விரும்புகின்றன. நிலையற்ற தன்மை, பயங்கரவாதம், அமைதியின்மைக்கு பதிலாக உலகம் நிலையாக, அமைதியாக, அன்பாக இருக்க வேண்டும் என இந்தியாவும், வங்காளதேசமும் விரும்புகிறது.

கொரோனா வைரஸ் பெருந்தொற்றின் போது இந்தியாவும், வங்காளதேசமும் அதன் திறமையை நிரூபித்துள்ளது. இரு நாடுகளும் இன்று பெருந்தொற்றுக்கு எதிராக வலிமை, இணைந்து போராடுகிறது. இந்தியாவில் தயாரிக்கப்படும் கொரோனா தடுப்பூசிகள் வங்காளதேச மக்களை சென்றடைவது தனது கடமையாக கருதி இந்தியா செயல்பட்டு வருகிறது. இவ்வாறு பிரதமர் மோடி பேசினார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து