முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழக வெற்றிக்கழகம் சார்பில் 10 பேர் கொண்ட தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழுவை அமைத்த விஜய்

வெள்ளிக்கிழமை, 9 ஜனவரி 2026      தமிழகம்
vijay 2025-01-06

சென்னை, தேர்தலுக்கான தேர்தல் அறிக்கை தயாரிக்க 10 பேர் கொண்ட குழுவை அமைத்து த.வெ.க. தலைவர் விஜய் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அதனை எதிர்கொள்வதற்கான ஆயத்தப் பணிகளில் அரசியல் கட்சிகள் ஈடுபட்டு வருகின்றன. இந்த நிலையில், சட்டமன்ற தேர்தலுக்கான தேர்தல் அறிக்கை தயாரிக்க 10 பேர் கொண்ட குழுவை அமைத்து த.வெ.க. தலைவர் விஜய் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக விஜய் வெளியிட்டுள்ள அறிவிப்பு பின்வருமாறு;

அனைவருக்கும் வணக்கம். தமிழ்நாட்டு மக்களின் முன்னேற்றத்தையும் மாநிலத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சியையும் நோக்கமாகக் கொண்டு, நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, தமிழக வெற்றிக் கழகம் சார்பில் தேர்தல் அறிக்கை தயாரிக்கப்பட இருக்கிறது. இதற்காகச் சிறப்புக் குழு அமைக்கப்படுகிறது. 

இந்தக் குழு, தமிழகம் முழுவதும் பொதுமக்கள், சிறு, குறு தொழில் அமைப்புகள், தொழிலாளர் அமைப்புகள், பொருளாதார & தொழில் வல்லுனர்கள், வர்த்தக சபைகள், பல்வேறு ஊழியர் சங்கங்கள், விவசாயச் சங்கங்கள், கல்வியாளர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள், மகளிர் அமைப்புகள், இளைஞர் அமைப்புகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரின் கருத்துகளையும் தேவைகளையும் அறிந்து, தரவுகளைப் பெறவுள்ளது.

அவர்களிடம் இருந்து பெறப்படும் தரவுகளின் அடிப்படையில் தமிழ்நாட்டு மக்களையும் ஒட்டுமொத்த மாநிலத்தையும் வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்லும் வகையில் தேர்தல் அறிக்கையினைத் தயார் செய்யவுள்ளது.

தேர்தல் அறிக்கைக் குழு விவரம் வருமாறு.,  மருத்துவர் கே.ஜி.அருண்ராஜ்., ஜே.சி.டி. பிரபாகர்., ஏ.ராஜ்மோகன்., டி.எஸ்.கே. மயூரி.,  பேராசிரியர். ஏ.சம்பத்குமார்.,  எம்.அருள் பிரகாசம்., விஜய் பரணிபாலாஜி., ஜே.முகமது பர்வேஸ்., கே.கிறிஸ்டி பிருத்வி, எம்.கே.தேன்மொழி பிரசன்னா, வழக்கறிஞர் எம்.சத்யகுமார். 

மேற்கண்ட குழுவினருக்குக் கழகத் தோழர்கள் முழு ஒத்துழைப்பு நல்குவதோடு, அந்தந்தப் பகுதிகளில் சம்பந்தப்பட்ட அமைப்புகளைச் சந்திக்கும் பொழுது தேவையான உதவிகளைச் செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 8 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 10 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 10 months ago
View all comments

வாசகர் கருத்து