முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முக கவசம் அணியாவிட்டால் ரூ.1000 அபராதம் விதிக்கப்படும்: தெலுங்கான முதல்வர் அறிவிப்பு

வெள்ளிக்கிழமை, 9 ஏப்ரல் 2021      இந்தியா
Image Unavailable

தெலுங்கானாவில் வீடுகளை விட்டு வெளியே வரும் மக்கள் முக கவசம் அணியாவிட்டால் 1,000 ருபாய் அபராதம் விதிக்க முதல்வர் சந்திரசேகரராவ் உத்தரவிட்டுள்ளார்.

கொரோனா பரவல் காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதல் முதல் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு பல்வேறு தள்ர்வுகளுடன் இன்னும் நீடித்து வருகிறது. கொரோனா ஊரடங்கால் அனைத்து தரப்பினரும் பாதிக்கப்பட்டனர். தற்போது மீண்டும் கொரோனா 2-வது அலை ஏற்பட்டுள்ளது. இதனை கட்டுப்படுத்தும் வகையில் பல்வேறு புதிய கட்டுப்பாடுகளை அரசு அறிவித்துள்ளது. 

தெலுங்கானாவில் வீடுகளை விட்டு வெளியே வரும் மக்கள் முக கவசம் அணியாவிட்டால் 1,000 ருபாய் அபராதம் விதிக்க அம்மாநில முதல்வர் சந்திரசேகரராவ் உத்தரவிட்டுள்ளார்.  பொது இடங்களில் முக கவசம் அணியாதவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க சுகாதாரத்துறை, போலீசாருக்கு  அவர் உத்தரவிட்டுள்ளார். மேலும் 45 வயதைத் தாண்டிய அனைவரும் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளுமாறும் சந்திர சேகர ராவ்  கேட்டுக்கொண்டுள்ளார்.  கொரோனா பரவலால் பள்ளிக்கூடங்கள் மூடப்பட்டதால் தெலுங்கானா மாநிலத்தில் உள்ள தனியார் பள்ளிக்கூடங்களில் பணியாற்றிய ஆசிரியர்களும், பணியாளர்களும் பொருளாதார ரீதியாக பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர். அவர்களுக்கு உதவும் வகையில், அனைவருக்கும் தலா ரூ. 2 ஆயிரமும், 25 கிலோ அரிசியும் வழங்க முதல்வர் சந்திரசேகரராவ் உத்தரவிட்டுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago
View all comments

வாசகர் கருத்து