முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பா.ஜ.க.வேட்பாளர்களை ஆதரித்து மேற்குவங்கத்தில் அமித்ஷா பிரச்சாரம்

திங்கட்கிழமை, 12 ஏப்ரல் 2021      அரசியல்
Image Unavailable

294 தொகுதிகளை கொண்ட மேற்குவங்காள சட்டசபைக்கு 8 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. ஏற்கனவே 4 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றுள்ளது. எஞ்சிய 5 கட்டங்களும் முறையே ஏப்ரல் 17, 22, 26 மற்றும் 29 ஆகிய தேதிகளில் தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் மே 2-ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்படுகிறது. அந்த வகையில் 44 தொகுதிகளுக்கு 5-ம் கட்ட தேர்தல் வரும் 17-ம் தேதி நடைபெற உள்ளது. 

இத்தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ், பா.ஜ.க., காங்கிரஸ் கூட்டணிகளுக்கு இடையே மும்முனை போட்டி நிலவி வருகிறது. அடுத்தகட்ட தேர்தல்கள் நெருங்கி வரும் நிலையில் அரசியல் கட்சியினர் தீவிர வாக்குச்சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.  இந்நிலையில், அம்மாநிலத்தின் துப்ஹூரி பகுதியில் பாஜக வேட்பாளர்களை ஆதரித்து உள்துறை மந்திரி அமித்ஷா நேற்று பிரசாரத்தில் ஈடுபட்டார். 

அப்போது பேசிய அமித்ஷா, தேசிய குடிமக்கள் பதிவேடு (என்.ஆர்.சி.) கொண்டுவரப்பட்டால் கூர்க்கா சமூகம் வெளியேறப்படுவார்கள் என்று தவறான தகவல் பரப்பப்பட்டு வருகிறது. என்.ஆர்.சி. இன்னும் கொண்டுவரப்படவில்லை.  ஆனால். என்.ஆர்.சி. கொண்டுவரப்பட்டாலும் ஒரு கூர்க்கா சமூக மக்கள் கூட வெளியேற்றப்படமாட்டார்கள். திரிணாமுல் காங்கிரஸ் பொய் சொல்கிறது. ஒரு கூர்க்கா கூட பாதிக்கப்படமாட்டார்கள். 

கலிம்பங்க் பல ஆண்டுகளாக பாதிக்கப்பட்டுள்ளது. 1986 ஆம் ஆண்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உங்களை அடக்கியது. 1200-க்கும் அதிகமான கூர்க்கா மக்கள் உயிரிழந்தனர். உங்களுக்கு நீதி இன்னும் கிடைக்கவில்லை. தீதி (மம்தா பானர்ஜி) ஆட்சிக்கு வந்தபோதும் அவரும் சில கூர்க்கா மக்களின் உயிரிழப்புக்கு காரணாமாக இருந்தார். அதற்கும் நீதி கிடைக்கவில்லை. பா.ஜ.க. அரசை தேர்ந்தெடுங்கள். நாங்கள் வந்த உடன் சிறப்பு விசாரணை குழுவை அமைத்து நீதி கிடைக்கசெய்து தவறு செய்தவர்களை சிறையில் தள்ளுவோம். 

பா.ஜ.க.-வை தீதி (மம்தா) தேவையில்லாமல் பழித்துப்பேசுகிறார். உங்களுக்கு எதிராக பாஜக போட்டியிடுகிறது என்று நீங்கள் (மம்தா) தவறாக நினைத்துக்கொண்டுள்ளீர்கள். தாய்மார்கள், வடக்கு வங்காள சகோதரிகள், ராஜ்போங்ஷீ சமூகம், கூர்க்கா சமூகம், தேயிலை தோட்ட ஊழியர்கள், விவசாயிகள் தான் உங்களுக்கு (மம்தா) எதிராக போட்டியிடுகின்றனர். 

மேற்குவங்காள மக்கள் என்னை எப்போது பதவியை ராஜினாமா செய்ய சொல்கிறார்களோ அப்போது எனது பதவியை நான் ராஜினாமா செய்வேன். ஆனால் மே 2-ம் தேதி மேற்குவங்காள முதல்மந்திரி பதவியில் இருந்து ராஜினாமா செய்ய நீங்கள் (மம்தா) தயாராக இருங்கள்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து