முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருப்பதி கோவிலில் வசந்த உற்சவம் 24-ம் தேதி முதல் 3 நாட்கள் நடக்கிறது

புதன்கிழமை, 21 ஏப்ரல் 2021      ஆன்மிகம்
Image Unavailable

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நடைபெறும் முக்கிய விழாக்களில் ஒன்றான வசந்த உற்சவம் வருகிற 24-ம் தேதி முதல் 26-ம் தேதி வரை 3 நாட்கள் நடக்கிறது.

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நடைபெறும் முக்கிய விழாக்களில் ஒன்றான வசந்த உற்சவம் வருகிற 24-ம் தேதி முதல் 26-ம் தேதி வரை 3 நாட்கள் நடக்கிறது. கொரோனா கட்டுப்பாடு காரணமாக விழா பக்தர்களின்றி ஏகாந்தமாக நடத்தப்படுகிறது.  இதன் காரணமாக இரண்டாவது நாள் நடக்கும் தங்கரதம் ரத்து செய்யப்படுகிறது. விழாவையொட்டி கோவில் கல்யாண மண்டபத்தில் பிற்பகல் 2 மணி முதல் மாலை 4 மணி வரை சாமிக்கு திருமஞ்சனமும், பால், தயிர், தேன், இளநீர், மஞ்சள் மற்றும் சந்தனம் ஆகியவற்றால் அபிஷேகமும் செய்யப்படுகிறது.  மாலை 6 மணி முதல் 7 மணி வரை ஆஸ்தானம் நடக்கிறது. இரவு 7 மணிக்கு சுவாமி மற்றும் அம்பாள் வீதி உலா நடக்கிறது.  வசந்த உற்சவம் காரணமாக ஊஞ்சல் சேவை, கல்யாண உற்சவம் போன்றவை மூன்று நாட்களுக்கு ரத்து செய்யப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து