எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

நாட்டில் உள்ள அனைத்து ஆக்சிஜன் உற்பத்தி ஆலைகளையும் ராணுவத்தின் மூலம் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் கொண்டு வரவேண்டும் என்று நேற்று நடந்த பிரதமருடனான ஆலோசனை கூட்டத்தில் டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் வலியுறுத்தினார்.
இந்தியாவில் கொரோனா வைரசின் இரண்டாவது அலை வேகமாக பரவி வரும் நிலையில், பாதிப்பு அதிகம் உள்ள 10 மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி நேற்று காணொளி வாயிலாக ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் பேசிய போது,
டெல்லியில் உள்ள மருத்துவமனைகளில் ஆக்சிஜன் பற்றாக்குறை நிலவுவதாகவும், பிரதமர் உடனடியாக தலையிட்டு இதற்கு தீர்வு காண வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். டெல்லியில் ஆக்சிஜன் பற்றாக்குறை உள்ளது. இங்கு ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் ஆலை இல்லாவிட்டால் டெல்லி மக்களுக்கு ஆக்சிஜன் கிடைக்காதா? டெல்லிக்கு வரும் ஆக்சிஜன் டேங்கர் வேறொரு மாநிலத்தில் தடுத்து நிறுத்தப்படும் போது, மத்திய அரசாங்கத்தில் நான் யாருடன் பேச வேண்டும் என்று தயவு செய்து கூறுங்கள் என கெஜ்ரிவால் கேட்டார்.
மேலும், நாட்டில் உள்ள அனைத்து ஆக்சிஜன் உற்பத்தி ஆலைகளையும் ராணுவத்தின் மூலம் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் கொண்டு வரவேண்டும், ஆக்சிஜன் ஏற்றி வரும் லாரிகளுக்கு ராணுவ பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 1 year 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 1 year 1 month ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 1 month ago |