முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழகத்தில் கொரோனா கட்டுக்குள் வந்து விடும் : சுகாதாரத்துறை செயலாளர் நம்பிக்கை

சனிக்கிழமை, 24 ஏப்ரல் 2021      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை : தமிழகத்தில் கொரோனா கட்டுக்குள் வந்து விடும். அச்சம் வேண்டாம் என சுகாதாரத்துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறி உள்ளார்.

சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்த சுகாதாரத்துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறியதாவது:-

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தேசிய அளவில் 2,620 நபர்களும் தமிழக அளவில் 78 நபர்களும் உயிரிழந்துள்ளனர்.

தமிழகத்தில் இறப்பு விகிதம் 2.9 சதவீதமாக உள்ளது.  தற்போது 95,048 பேர் கொரோனா நோய்தொற்று பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 48,289 பேர் வீட்டில் தங்களை தனிமைப்படுத்தியுள்ளனர். அதன் சதவீதம்  50.8 ஆகும். கொரோனா கவனிப்பு மையங்களில் 8,414 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். அது  8.85 சதவீதம்  ஆகும். 

24,569 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அதன் சதவீதம் 25.8 விழுக்காடு ஆகும். கொரோனா அறிகுறிகள் இருந்தால் காய்ச்சல் முகாம்களில் சென்று சோதனை செய்து கொள்ளுங்கள்.  அங்குள்ள மருத்துவர் உங்களை சோதனை செய்து உங்களுக்கான சிகிச்சை முறையை வழங்குவார்.

சிக்கலான தருணங்களில் 108 அல்லது 0444- 6122300 என்று எண்களை அழையுங்கள். அதே போல 104 எண்ணையும் அழைக்கலாம். பொதுமக்கள் பதற்றமடைந்து மருத்துவமனைகளில் குவிய வேண்டாம்.

 தமிழகத்தில் கொரோனா சிகிச்சைக்குப் போதுமான அளவில் படுக்கை வசதிகள் உள்ளன.படுக்கைகள் கிடைக்காது என்று யாரும் அச்சம் அடைய வேண்டாம். தமிழகத்தில் ஆக்சிஜன் தட்டுப்பாடு, ஆக்சிஜன் கசிவு வந்து விடக் கூடாது என்பதில் கவனம் செலுத்தி வருகிறோம்.  தேவையான மருந்துகள் கையுருப்பு உள்ளது.

ரெம்டிசிவிர் மருந்தை மக்கள் தாமாகவே எடுத்துக் கொள்ள கூடாது . மருத்துவரின் பரிந்துரைப்படி தான் எடுத்துக் கொள்ள வேண்டும். தனியார் மருத்துவமனைகளுக்கு கொரோனா கட்டண கட்டுப்பாடுகள் உள்ளது.  தமிழக அரசு அறிவித்த கட்டணத்தை மட்டுமே தனியார் மருத்துவமனைகள் வசூலிக்க வேண்டும். கொரோனா கட்டுக்குள் வந்து விடும். அச்சம் வேண்டாம். அடுத்த 10 நாட்களுக்கு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் பொது மருத்துவம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

சென்னையிலுள்ள மருத்துவமனைகளில் கூடுதலாக 2,400 ஆக்ஸிஜன் கொள்கலன்களை கூடுதலாக வழங்க உத்தரவிடப்பட்டு உள்ளது. ஒரு நிமிடத்திற்கு 150 லிட்டர் ஆக்ஸிஜன் உற்பத்தி செய்யும் திறன் கொண்ட கலனை அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. சென்னை அண்ணா நகர் புறநகர் மருத்துவமனையில் ஆக்ஸிஜன் உற்பத்தி கலன் அமைக்கப்பட உள்ளது என்று தெரிவித்தார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து