எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தடுப்பூசி இலவசமாக அனைவருக்கும் செலுத்தப்படும் என்று முதன்முதலில் அறிவித்த மாநிலம் தமிழ்நாடு என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
தலைமைச் செயலகத்தில் தமிழ்நாடு முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி தலைமையில், ஸ்டெர்லைட் ஆலையில் பிராணவாயு பிரிவை மட்டும் தற்காலிகமாக செயல்பட அனுமதி அளிப்பது தொடர்பாக நடைபெற்ற அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் கூட்டத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆற்றிய உரை வருமாறு-
கொரோனா வைரஸ் பரவல் தமிழகத்தில் ஏற்பட்டவுடன் அம்மாவின் அரசால் எடுக்கப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளின் காரணமாக, கொரோனா வைரஸ் பரவல் எந்த அளவுக்கு கட்டுப்பட்டுத்தப்பட்டுள்ளது என்ற விவரத்தை சுருக்கமாக நான் தெரிவிக்க விரும்புகிறேன்.
2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் கொரோனா வைரஸ் தொற்று சீனாவில் கண்டறியப்பட்டவுடன் அம்மாவின் அரசு முன்னேற்பாடாக பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்கு கடும் முயற்சி மேற்கொண்டது. மருந்துகள் கொள்முதல், மருத்துவ உபகரணங்களான சூ-95 முகக்கவசங்கள், மூன்று மடிப்பு முகக்கவசங்கள், முழு உடல் கவசங்கள் வாங்குவதற்கு பணியாணை வழங்கப்பட்டு, தேவையான அளவுக்கு கொள்முதல் செய்யப்பட்டு, நாம் கையிருப்பில் வைத்திருக்கின்றோம். அதேபோல, மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் அடங்கிய 12 ஒருங்கிணைப்பு குழுக்கள் அமைக்கப்பட்டன. மருத்துவ வல்லுநர்கள் மற்றும் பொது சுகாதாரத் துறை வல்லுநர்கள் அடங்கிய வல்லுநர் குழு அமைக்கப்பட்டு நோய் பரவலை கண்டறிவதற்காக இவையெல்லாம் முன்னேற்பாடாக செய்யப்பட்டது. எனது தலைமையில் 14 முறை அனைத்து மாவட்ட ஆட்சித் தலைவர்களுடன் ஆய்வுக் கூட்டம் காணொலிக் காட்சி மூலம் நடத்தப்பட்டு, அவ்வப்போது தக்க ஆலோசனைகள் வழங்கப்பட்டன. 15 முறை எனது தலைமையில் மருத்துவ வல்லுநர்களின் ஆய்வுக் கூட்டங்கள் நேரடியாக நடத்தப்பட்டன. அதில் மருத்துவ வல்லுநர்களின் கருத்துக்களைக் கேட்டு, கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்குண்டான நடவடிக்கைகள் அரசால் மேற்கொள்ளப்பட்டன. அதேபோல, தலைமைச் செயலாளர் அவர்கள் தலைமையில் 14 முறை மாவட்ட ஆட்சித் தலைவர்களுடன் காணொலிக் காட்சி மூலம் ஆய்வுக் கூட்டம் நடத்தப்பட்டு, தலைமைச் செயலாளர் அவர்கள் தக்க அறிவுரைகளையும், ஆலோசனைகளையும் வழங்கினார்கள்.
அதுமட்டுமல்லாமல், நானே நேரடியாக தமிழ்நாட்டிலுள்ள அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்த நேரடியாக சென்று மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் ஆலோசனை நடத்தப்பட்டு, அந்த ஆலோசனைக் கூட்டத்தில் மருத்துவ வல்லுநர்கள் குறிப்பிட்ட கருத்துக்களை எடுத்துச் சொல்லி, கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்கு அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டன. அதோடு, அரசு அறிவித்த வழிகாட்டு நெறிமுறைகளை மக்கள் தொடர்ந்து கடைபிடிக்க வேண்டுமென்பதற்காக பத்திரிகை, தொலைகாட்சி மற்றும் ஒலி பெருக்கியின் மூலமாக தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்கு தேவையான தளர்வுகளுடன் பொதுமுடக்கம் மிகவும் கவனமாகவும், பாதுகாப்பாகவும் அமல்படுத்தப்பட்டது. இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் மட்டும்தான் அதிகப்படியான ஆர்.டி.பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதுவரை 2 கோடியே 18 இலட்சம் நபர்கள் பரிசோதிக்கப்பட்டு நோய் அறிகுறி உள்ளவர்கள் துல்லியமாக கண்டறியப்பட்டு, அவர்களுக்கு உரிய சிகிச்சை அளித்த காரணத்தால் கொரோனா வைரஸ் பரவல் கடந்த காலத்தில் கட்டுப்படுத்தப்பட்டது. வல்லுநர் குழுவின் பரிந்துரைப்படி, இதர நோயுள்ள மக்கள் மற்றும் கர்ப்பிணி தாய்மார்கள், குழந்தைகள், முதியோர் போன்ற நோய் தொற்றினால் எளிதில் பாதிக்கக்கூடிய நபர்களுக்கு கொரோனா தொற்று வராமல் தடுக்க, களப்பணியாளர்கள் மூலம் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு, அவர்களுக்குத் தேவையான உதவிகளை அரசு தொடர்ந்து செய்து கொடுத்து கொரோனா வைரஸ் பரவல் கட்டுப்படுத்தப்பட்டது.
அதேபோல, தமிழகத்தில் அதிகமாக காய்ச்சல் முகாம்கள் நடத்தப்பட்டு, அந்த காய்ச்சல் முகாமில் அதிக அளவில் மக்களை கலந்துகொள்ளச் செய்து அவர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டு, பரிசோதனையில் நோய் அறிகுறி தென்பட்டவர்களை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு, குணப்படுத்தப்பட்டு, அதனால் கொரோனா வைரஸ் பரவல் கட்டுப்படுத்தப்பட்டது.
கோவிட் நோய்க்கான சிறப்பு சிகிச்சை அளிக்க கூடுதலாக 15,000 மருத்துவ பணியாளர்கள் பணி நியமனம் செய்யப்பட்டு பணியமர்த்தப்பட்டனர். உயிர் காக்கும் உயரிய மருந்துகள் கொள்முதல் செய்யப்பட்டு, மாவட்ட மருத்துவமனைகளில் போதுமான அளவு கையிருப்பு உறுதி செய்யப்பட்டது. பெருநகர சென்னை மாநகராட்சியில் ஒவ்வொரு மண்டலத்திற்கும் அமைச்சர்கள், சிறப்பு அதிகாரிகள், கூடுதலாக களப்பணியாளர்களை நியமித்து நோய் பாதிக்கப்பட்டவர்கள் கண்டறியப்பட்டு, உடனுக்குடன் சிகிச்சை அளிக்கப்பட்டு கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் பாதுகாக்கப்பட்டனர். அவர்களுக்கு உரிய சிகிச்சை அளித்தன் மூலம் அவர்கள் குணமடைந்து வீடு திரும்பினர்.
கொரோனா தடுப்பூசி இலவசமாக அனைவருக்கும் செலுத்தப்படும் என முதன்முதலில் அறிவித்த மாநிலம் தமிழ்நாடு. கொரோனா நோய்த் தொற்று தடுப்பூசி போடுவதற்கு அனைத்து நடவடிக்கையும் எடுக்கப்பட்டு, இதுவரை 52 இலட்சத்து 61 ஆயிரம் பயனாளிகளுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. மே 1ஆம் தேதி முதல் 18 வயதிற்கு மேல் உள்ள அனைவருக்கும் இலவசமாக தடுப்பூசி செலுத்த அறிவித்து, முன்னேற்பாடுகளை அரசு செய்து வருகிறது.
இந்தியா முழுவதும் படிப்படியாக குறைந்து வந்த கொரோனா நோய்த தொற்று கடந்த மார்ச் மாதத்தில் பன்மடங்கு அதிகரித்துள்ளது. குறிப்பாக, மகாராஷ்டிரா, மத்தியப் பிரதேசம், குஜராத், சத்தீஸ்கர், பஞ்சாப் மற்றும் பல வட மாநிலங்களில் அதிகரித்த நிலையில் காணப்பட்டு வருகிறது. மேலும், கேரளா, கர்நாடகா, ஆந்திரா, புதுச்சேரி மற்றும் தமிழ்நாட்டிலும் நோய்த் தொற்று படிப்படியாக அதிகரித்து காணப்படுகிறது. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை நாளொன்றுக்கு 450 என கண்டறியப்பட்ட தொற்று நோய், தற்போது நாளுக்கு நாள் அதிகரித்து இன்றையதினம் சுமார் 15,000 நபர்கள் அளவுக்கு கொரோனா நோய்த் தொற்று ஏற்பட்டிருக்கின்றது. குறிப்பாக, பெருநகர சென்னை மாநகராட்சி, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், கோயம்புத்தூர், மதுரை, திருநெல்வேலி போன்ற மாவட்டங்களில் கொரோனா வைரஸ் தொற்று கூடுதலாக உள்ளது. பெருகிவரும் நோய்த் தொற்றை கட்டுப்படுத்தும் வகையில், பொருளாதாரம் அதிகளவில் பாதிக்காதவாறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகிறது. மார்ச் 2020-ல் இந்தியாவில் கோவிட்-19 நோய்த் தொற்று ஏற்பட்டு, நாட்டின் பல்வேறு மாநிலங்களில் வெவ்வேறு வகைகளில் பாதிக்கப்பட்டுள்ளன.
கோவிட்-19 முதல் அலையின்போது தமிழ்நாடு அரசு எடுத்து அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளின் காரணமாக நோய்த் தொற்று தமிழகத்தில் படிப்படியாக குறைந்து, இறப்பு விகிதமும் குறைக்கப்பட்டது. நோய்ப் பரவலைக் கட்டுப்படுத்த அரசு மருத்துவமனைகளில் திரவ ஆக்சிஜன் கொள்ளளவை அதிகரிக்கவும், கோவிட் படுக்கைகள் அதிகரித்தல் உள்ளிட்ட பல்வேறு சுகாதார உட்கட்டமைப்பு வசதிகளை பெருமளவில் அதிகரிக்க தமிழ்நாடு அரசு எடுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளால் கோவிட்-19 இரண்டாம் அலையின் தாக்கம் கட்டுக்குள் உள்ளது. சில மாநிலங்கள் அளவுக்கு தமிழ்நாட்டில் இந்த நோயின் தாக்கம் அதிகளவில் இல்லையென்றாலும், இப்போது நாள்தோறும் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்துக் கொண்டிருக்கின்ற நிலையை நாம் பார்க்கின்றோம். இருப்பினும், தொடர்ந்து அதிகரித்து வரும் இந்நோய்த் தொற்றின் எண்ணிக்கையை கருத்தில் கொண்டு, மருத்துவ உட்கட்டமைப்புகளை, குறிப்பாக, மருத்துவ ஆக்சிஜன் உற்பத்தியை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டியுள்ளது. இதனைக் கருத்தில் கொண்டு பாரதப் பிரதமர் அவர்களுக்கு, தமிழ்நாட்டில் உற்பத்தியாகும் மருத்துவ பிராண வாயுவை தமிழ்நாட்டிலிருந்து பிற மாநிலங்களுக்கு அனுப்ப வேண்டாம் என்று வலியுறுத்தி கடிதம் எழுதியிருக்கின்றேன். இந்நிலையில், தூத்துக்குடி சிப்காட் வளாகத்தில் 1997 முதல் 2018 வரை இயங்கி வந்த வேதாந்தா தாமிர உருக்காலை நிறுவனம் தமிழ்நாடு அரசால் நிரந்தரமாக முத்திரையிடப்பட்டு, மூடப்பட்டது. அரசின் இந்த நடவடிக்கையை மாண்புமிகு சென்னை உயர்நீதிமன்ற அமர்வு உறுதி செய்தது.
இந்தத் தீர்ப்பிற்கு எதிராக, மாண்புமிகு உச்ச நீதிமன்றத்தில், வேதாந்தா நிறுவனம் மேல்முறையீடு செய்து, தற்போது உச்சநீதிமன்றத்தில், அந்த நிறுவனம் ஒரு இடைக்கால மனுவை கீழ்க்காணும் வேண்டுகோளுடன் தாக்கல் செய்துள்ளது. தூத்துக்குடி வேதாந்தா நிறுவனத்திலுள்ள முக்கிய சொத்துக்களை பாதுகாத்து, பராமரிக்க அனுமதிக்க வேண்டும்; கொரோனா தாக்கத்தினால், தேவைப்படும் பிராணவாயுவை தங்களது இரண்டு பிராணவாயு உற்பத்தி செய்யும் கூடத்திலிருந்து நாளொன்றுக்கு வாயு நிலையிலுள்ள பிராணவாயுவை 1050 மெட்ரிக் டன் உற்பத்தி செய்து அதனை அருகிலிருக்கும் மருத்துவமனைகளுக்கும் மற்றும் நாட்டின் பிற மாநிலங்களில் கோவிட்-19 சிகிச்சைக்கும் தேவைக்கேற்ப இலவசமாக விநியோகம் செய்ய அனுமதிக்க வேண்டும் என கேட்டுள்ளது. வேதாந்தா நிறுவனம் தங்களது நிறுவனத்திலுள்ள இரண்டு பிராணவாயு உற்பத்தி செய்யும் கூடத்தில், உபகரணங்களின் நிலைமைக்கேற்ப 2 அல்லது
4 வாரங்களுக்குள்ளாகவே வாயு நிலையிலுள்ள பிராணவாயு உற்பத்தி செய்து தர முடியும் என்று உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. இந்த இடைக்கால மனு உச்சநீதிமன்றத்தில், 22.4.2021 மற்றும் 23.4.2021 ஆகிய தினங்களில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. மேலும், தமிழ்நாடு அரசின் பதில் மனுவை தாக்கல் செய்ய உத்தரவிட்டு மீண்டும் விசாரணைக்கு வரவிருக்கின்றது, தமிழ்நாடு அரசின் நிலைபாட்டை உச்சநீதிமன்றத்தில் தெரிவிக்கவேண்டும். இது குறித்து முதலில், சுகாதாரத் துறை முதன்மைச் செயலாளர் அவர்கள் சில விளக்கங்களை அளிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். அதனைத் தொடர்ந்து, இங்கு பங்கேற்றுள்ள அனைத்து கட்சிகளினுடைய நிர்வாகிகள் தங்களுடைய கருத்துக்களை சுருக்கமாக தெளிவுபடுத்தலாம். தற்போது ஆக்சிஜன் பற்றாக்குறை இருக்கின்ற காரணத்தால், ஒரு முக்கியமான நிலையில், சோதனையான நிலையில் நாம் இருக்கின்றோம். மக்களுடைய உயிரை காப்பாற்றுவது அனைவருடைய கடமை, அந்தக் கடமையுணர்வோடு அனைத்துக் கட்சி ஆலோசனைக் கூட்டத்தை கூட்டியிருக்கின்றோம். இருந்தாலும், இன்னும் அனைத்துக் கட்சிகளுடைய கூட்டத்தை கூட்ட வேண்டுமென்றுதான் அரசு எண்ணியது. ஆனால், இன்றோ, நாளையோ நீதிமன்றத்தில் வழக்கு வருகின்ற சூழ்நிலை இருக்கின்ற காரணத்தால், அனைத்து கட்சிகளையும் அழைக்க இயலவில்லை. இருந்தாலும், முக்கிய கட்சிகளின் நிர்வாகிகளை அழைத்து தங்களுடைய மேலான கருத்துக்களைத் தெரிவிக்குமாறு அன்போடு கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு எடப்பாடி பழனிசாமி பேசினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 11 months 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 12 months 2 days ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 2 weeks ago |
-
இன்று தி.மு.க. முப்பெரும் விழா: முதல்வர் மு.க.ஸ்டாலின் கரூர் வருகை
16 Sep 2025கரூர் : தி.மு.க.வின் முப்பெரும் விழா இன்று (புதன்கிழமை) கரூர் கோடங்கிபட்டியில் நடைபெற உள்ளது. விழாவில் முதல்வரும், தி.மு.க.
-
தீபாவளி சிறப்பு ரயில்களுக்கு இன்று முன்பதிவு தொடக்கம் : தெற்கு ரயில்வே அறிவிப்பு
16 Sep 2025சென்னை, : தீபாவளி உள்ளிட்ட பண்டிகைக்கால சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு இன்று (செப். 17) தொடங்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
-
மதுரையில் பயங்கரம்: கூலிப்படையை ஏவி தொழிலதிபர் கொலை
16 Sep 2025மதுரை : மதுரையில் கூலிப்படையை ஏவி தொழிலதிபர் கொலை செய்யப்பட்டதை அடுத்து பங்குதாரர் உள்பட 7 பேரை போலீசார் கைது செய்தனர்.
-
ரயில் டிக்கெட் முன்பதிவு முறையில் புதிய மாற்றம் : அக்டோபர் 1 முதல் அமல்
16 Sep 2025டெல்லி : ரயில் டிக்கெட் முன்பதிவு முறையில் புதிய மாற்றம் அக்டோபர் மாதம் முதல் அமலுக்கு வருகிறது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 16-09-2025.
16 Sep 2025 -
நாளை மறுநாள் வெளியாகும் தண்டகாரண்யம்
16 Sep 2025Learn&Teach புரொடக்ஷன் S.சாய் தேவானந்த், S.சாய் வெங்கடேஸ்வரன், நீலம் புரொடக்ஷன் தயாரிப்பில், இயக்குனர் அதியன் ஆதிரை இயக்கத்தில், தினேஷ், கலையரசன், ஷபீர், பால
-
எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வரும் அர்ஜூன் தாஸ்
16 Sep 2025’கைதி’ மற்றும் ‘மாஸ்டர்’ படங்களின் மூலம் வில்லத்தனத்தில் மிரட்டியவர் அர்ஜுன் தாஸ், ‘போர்’, ‘ரசாவதி’, ‘அநீதி’ போன்ற வித்தியாசமான கதைக்களம் கொண்ட படங்களில் ஹீரோவாக நடித்த
-
இன்று முதல் திருச்சியில்-டெல்லி நேரடி விமான சேவை தொடக்கம்
16 Sep 2025திருச்சி : திருச்சியில் இருந்து டெல்லிக்கு நேரடி விமான சேவை இன்று முதல் தொடங்கப்படவுள்ளது.
-
உத்தரகாண்டில் மேகவெடிப்பு: நிலச்சரிவு சாலைகள் துண்டிப்பு
16 Sep 2025உத்தரகாண்ட் : உத்தரகாண்டில் மேகவெடிப்பு காரணமாக நிலச்சரிவு ஏற்பட்டதில் சாலைகள் துண்டிக்கப்பட்டது 5 பேர் மாயமாகி உள்ளனர்.
-
உலகின் எந்த நாட்டில் இருந்தாலும் ஹமாஸ் தலைவா்களை தாக்குவோம் : இஸ்ரேல் பிரதமா் திட்டவட்டம்
16 Sep 2025ஜெருசலேம் : உலகின் ஹமாஸ் தலைவா்கள் எந்த நாட்டில் இருந்தாலும் தாக்குவோம் என்று இஸ்ரேல் பிரதமர் கூறியுள்ளார்.
-
அதிபர் ட்ரம்ப் இங்கிலாந்து பயணம்
16 Sep 2025லண்டன் : இங்கிலாந்துக்கு 3 நாள் பயணமாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் புறப்படுகிறார்.
-
பூஜையுடன் தொடங்கிய காட்ஸ்ஜில்லா
16 Sep 2025சினிமா மீடியா அண்ட் என்டர்டெய்ன்மென்ட் லிமிடெட் - தினேஷ் ராஜ் வழங்கும், க்ரியேடிவ் என்டர்டெய்னர்ஸ் & டிஸ்ட்ரிபியூட்டர்ஸ் மற்றும் PGS புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரிக்கும
-
யோலோ திரைவிமர்சனம்
16 Sep 2025யுடியூப் சேனல் நடத்தும் நாயகன் தேவுக்கும், நாயகி தேவிகாவுக்கும் திருமணம் நடந்ததாக சிலர் கூறுகிறார்கள்.
-
ஆதீனம் விவகாரத்தில் போலீசார் பிரச்சினையை பெரிதாக்கி விட்டனர்: மதுரை ஐகோர்ட் கருத்து
16 Sep 2025சென்னை : மதுரை ஆதீனம் விவகாரத்தில் போலீசார் பிரச்சினையை பெரிதாக்கி விட்டனர் என்று மதுரை ஐகோர்ட்டு தெரிவித்துள்ளது.
-
தமிழகத்தில் இன்று தருமபுரி உள்ளிட்ட 28 மாவட்டங்களுக்கு 'மஞ்சள்' எச்சரிக்கை
16 Sep 2025சென்னை : தமிழகத்தில் இன்று ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி உள்ளிட்ட 28 மாவட்டங்களில் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதால் இரு நாள்களுக்கு இந்த மாவட்டங்களுக்கு ‘மஞ்சள்’ எச்சரிக்
-
படுக்கை, தலையணை வேண்டும்: சிறையில் இருக்கும் நடிகர் தர்ஷன் மனு
16 Sep 2025பெங்களூரு : சிறையில் படுக்கை, தலையணை கேட்டு நடிகர் தர்ஷன் மீண்டும் மனு தாக்கல் செய்துள்ளார்.
-
இந்தியா-அமெரிக்கா இடையே டெல்லியில் வா்த்தகப் பேச்சு
16 Sep 2025புதுதில்லி : இந்தியா-அமெரிக்கா இருதரப்பு வா்த்தக ஒப்பந்தப் பேச்சுவாா்த்தை நேற்று டெல்லியில் மீண்டும் நடைபெற்றது.
-
திருவள்ளுர், நெல்லை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் ரூ. 28.33 கோடி மதிப்பீட்டில் 4 புதிய தொழிற்பேட்டைகள் : முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
16 Sep 2025சென்னை : திருவள்ளுர், திருநெல்வேலி, திருவாரூர் உள்ளிட்ட 4 மாவட்டங்களில் சுமார் 5,400 பேர் வேலைவாய்ப்பு பெற்றிடும், ரூ.
-
தலைநகர் டெல்லியில் துணை ஜனாதிபதியை நேரில் சந்தித்து இ.பி.எஸ். வாழ்த்து
16 Sep 2025புதுடெல்லி : டெல்லி சென்றுள்ள எடப்பாடி பழனிசாமி, அங்கு துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணனை சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.
-
முதலில் கச்சா எண்ணெய், தற்போது சோளம்: இந்தியாவை அடிபணிய வைக்க அமெரிக்காவின் புதிய தந்திரம்
16 Sep 2025டெல்லி : அமெரிக்காவிடம் இருந்து மக்காச்சோளம் இறக்குமதி செய்ய இந்தியா மறுப்பு தெரிவித்தால் அமெரிக்க சந்தையை இந்தியா அணுகுவதை இழக்க நேரிடும் என அமெரிக்க வர்த்த செயலாளர் ஹ
-
2026-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தல்: தமிழக பா.ஜ.க. முக்கிய ஆலோசனை
16 Sep 2025சென்னை, வருகிற சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழக பா.ஜ.க. தலைவர்கள் முக்கிய ஆலோசனையில் ஈடுபட்டனர்.
-
உருட்டு உருட்டு திரைவிமர்சனம்
16 Sep 2025எந்நேரமும் குடி குடி அலையும் நாயகன் கஜேஷ் நாகேஷ்.
-
ரயில் டிக்கெட் முன்பதிவு: ஆதாா் பயனா்களுக்கு முன்னுரிமை
16 Sep 2025புதுதில்லி : ரயில் டிக்கெட் முன்பதிவுக்கு ஆதார் பயனர்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளது.
-
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர்: முதல் அணியாக சூப்பர் 4 சுற்றை உறுதி செய்தது இந்தியா
16 Sep 2025அபுதாபி : ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் முதல் அணியாக சூப்பர் 4 சுற்றை உறுதி செய்துள்ளது இந்திய அணி.
8 அணிகள்...
-
அ.தி.மு.க.வை யாராலும் ஒன்று செய்ய முடியாது : சென்னை பொதுக்கூட்டத்தில் இ.பி.எஸ். ஆவேசம்
16 Sep 2025சென்னை : அ.தி.மு.க.வை யாராலும் ஒன்று செய்ய முடியாது என்று தெரிவித்துள்ள அ.தி.மு.க.