முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரூ. 22 ஆயிரத்துக்கு ரெம்டெசிவிர் மருந்து விற்பனை செய்த 2 பேர் கைது

சனிக்கிழமை, 1 மே 2021      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை : மேடவாக்கத்தில் ரெம்டெசிவிர் மருந்தை ரூ. 22 ஆயிரத்துக்கு விற்பனை செய்ததாக நேற்று தாம்பரத்தை சேர்ந்த டாக்டர் தீபன் மற்றும் தனியார் மருந்தக ஊழியர் நரேந்திரன் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களுக்கு ரெம்டெசிவிர் மருந்தை டாக்டர்கள் பரிந்துரைத்து வருகிறார்கள்.  இந்த மருந்து வெளி மார்க்கெட்டிலும், தனியார் ஆஸ்பத்திரிகளிலும் கிடைப்பதில்லை. அரசு சார்பில் சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள மருத்துவ கல்லூரியில் விற்கப்படுகிறது. இதை வாங்குவதற்காக தமிழகம் முழுவதிலும் இருந்து டாக்டர்களின் பரிந்துரை கடிதத்துடன் நோயாளிகளின் உறவினர்கள் சென்னைக்கு படை யெடுக்கிறார்கள். 

2 நாட்கள் வரை காத்திருந்தால்தான் மருந்து கிடைக்கிறது. அந்த அளவுக்கு கூட்டம் அலை மோதுகிறது. ஒருவருக்கு 6 குப்பி மருந்து என்ற ரீதியில் விற்கப்படுகிறது. ஒரு குப்பி மருந்தின் விலை ரூ.1560 ஆகும். மொத்தம் 9,360 ரூபாய்.

ஆனால் இதை சிலர் கள்ளச்சந்தையில் வாங்கி ரூ. 20 ஆயிரத்துக்கு மேல் விற்கிறார்கள். அவ்வாறு விற்பனை செய்ததாக தாம்பரம் தனியார் ஆஸ்பத்திரி டாக்டர் முகமது இம்ரான்கான் மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த திருவண்ணாமலையை சேர்ந்த விஜய் ஆகியோர் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டனர்.

இந்த நிலையில் மேடவாக்கத்தில் ரெம்டெசிவிர் மருந்தை ரூ.22 ஆயிரத்துக்கு விற்பனை செய்ததாக நேற்று தாம்பரத்தை சேர்ந்த டாக்டர் தீபன் மற்றும் தனியார் மருந்தக ஊழியர் நரேந்திரன் ஆகியோர் சிக்கியுள்ளனர்.  அவர்களிடம் மருந்து எப்படி கிடைத்தது என்பது பற்றி போலீசார் விசாரித்து வருகிறார்கள்.  ரெம்டெசிவிர் மருந்தை கள்ளச்சந்தையில் விற்றாலும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் ஏற்கனவே எச்சரித்துள்ளார். 

இந்த நிலையில் ரெம்டெசிவிர் மருந்து தொடர்ந்து கள்ளச்சந்தையில் விற்கப்படுவது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. எவ்வாறு இந்த மருந்துகள் வெளியே கொடுக்கப்படுகிறது என்பது பற்றி உயர் அதிகாரிகள் ரகசியமாக கண்காணித்து வருகிறார்கள்.  இதில் சம்பந்தமாக மேலும் சிலர் சிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago
View all comments

வாசகர் கருத்து