முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மு.க.ஸ்டாலினுடன் தலைமைச்செயலாளர் சந்திப்பு

திங்கட்கிழமை, 3 மே 2021      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை : தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்துள்ளது. இதன்படி தமிழக முதல் அமைச்சராக வரும் 7 ஆம் தேதி மு.க ஸ்டாலின் பதவியேற்க உள்ளார். கொரோனா பரவல் காரணமாக ஆளுநர் மாளிகையில் எளிய முறையில் பதவியேற்பு விழா நடைபெறும் என கூறப்படுகிறது. 

இந்நிலையில் தமிழக முதலமைச்சராக பொறுப்பேற்க உள்ள மு.க.ஸ்டாலினை ஆழ்வார்பேட்டையில் உள்ள அவரது இல்லத்தில் தலைமைச்செயலாளர் ராஜீவ் ரஞ்சன் நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தினார்.

அவருடன் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணனும் பங்கேற்றுள்ளார். பதவியேற்பு நிகழ்ச்சி தொடர்பாகவும், கொரோனா பாதிப்புகளை தடுக்க மேற்கொள்ளப்பட்டுவரும் நடவடிக்கைகள் குறித்தும் மு.க.ஸ்டாலினுடன் முக்கிய ஆலோசனையில் ஈடுபட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து