முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இலங்கைக்கு எதிரான டி-20 - ஒருநாள் தொடர்: இளம் இந்திய அணிக்கு தலைமை பயிற்சியாளராகிறார் ராகுல் டிராவிட்

வியாழக்கிழமை, 20 மே 2021      விளையாட்டு
Image Unavailable

Source: provided

மும்பை : இலங்கைக்கு எதிரான டி-20 - ஒருநாள் தொடரில் விளையாடவுள்ள இளம் இந்திய அணிக்கு ராகுல் டிராவிட் தலைமைப் பயிற்சியாளராக நியமிக்கப்படவுள்ளார்.

இங்கிலாந்து தொடரின் போது 2014-ல் சீனியர் அணிக்கு பேட்டிங் ஆலோசகராக இருந்த ராகுல் டிராவிட்ஜூலை மாதம் இலங்கை செல்லவிருக்கும் இளம் இந்திய அணிக்குத் தலைமைப் பயிற்சியாளராகிறார்.

தலைமைப் பயிற்சியாளர்...

இங்கிலாந்து தொடரின் போது 2014-ல் சீனியர் அணிக்கு பேட்டிங் ஆலோசகராக இருந்த ராகுல் டிராவிட்ஜூலை மாதம் இலங்கை செல்லவிருக்கும் இளம் இந்திய அணிக்குத் தலைமைப் பயிற்சியாளராகிறார். ரவி சாஸ்திரி இங்கிலாந்தில் இருக்கும் இந்திய அணியுடன் இருப்பார் என்பதால் இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது.

கேப்டனாக தவான்... 

வரும் ஜூலை மாதம் இலங்கைக்குப் பயணிக்கும் அணிக்கு ஷிகர் தவான் கேப்டனாக நியமிக்கப்படலாம் என்று தெரிகிறது. 3 ஒருநாள் போட்டி, 3 டி-20 போட்டிகளில் இந்திய அணி பங்கேற்கிறது, இதில் மூத்த வீரர்கள் இருக்க மாட்டார்கள் என்பதால், பிரிதிவி ஷா, தேவ்தத் படிக்கல், ருதுராஜ் கெய்க்வாட், போன்ற இளம் வீரர்களுக்கு தொடரில் வாய்ப்பளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஜூலை 13-ம் தேதி முதல் ஜூலை 27-ம் தேதி வரை இந்தத் தொடர் நடைபெறுகிறது.

சாப்பல் புகழாரம்...

இந்திய சீனியர் அணியின் பிரமாதமான வெற்றிகளுக்கு இந்தியா ஏ மற்றும் இந்தியா யு-19 அணியிலிருந்து தொடர்ந்து இந்திய அணிக்கு அனுப்பப்பட்ட வீரர்கள் ராகுல் டிராவிட் பயின்றவர்கள். இன்றைய இந்திய அணியின் பெஞ்ச் வலுவிற்கு ராகுல் டிராவிட்தான் காரணம் என்று ஆஸ்திரேலியாவின் கிரெக் சாப்பல் புகழாரம் சூட்டியுள்ளார். 

ஜூலை 5-ம் தேதி... 

இந்நிலையில் மிகச்சரியான தருணத்தில் ராகுல் டிராவிட் இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளாராக நியமிக்கப்படவிருக்கிறார். இவருடன் பவுலிங் பயிற்சியாளராக பராஸ் மாம்ப்ரீ செல்கிறார். இந்தத் தொடரில் 3 ஒருநாள் போட்டிகள் ஜூலை 13, 16,19 ஆகிய தேதிகளிலும் டி20 போட்டிகள் ஜூலை 22,24,27 தேதிகளிலும் நடைபெறுகின்றன. இளம் இந்திய அணி ஜூலை 5-ம் தேதி இலங்கை செல்கிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து