முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கேரள விருதை திருப்பி அளிக்கிறேன்: வைரமுத்து

சனிக்கிழமை, 29 மே 2021      சினிமா
Image Unavailable

Source: provided

சென்னை : கேரள மாநிலத்தின் பெருமைமிக்க ஓ.என்.வி இலக்கிய விருதை திருப்பி அளிக்கிறேன் என்று கவிஞர் வைரமுத்து தெரிவித்துள்ளார். 

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில், ஓ.என்.வி இலக்கிய விருது அறிவிப்பை நான் ஓ.என்.வி கல்சுரல் அகாடமிக்கே திருப்பி அளிக்கிறேன் . காழ்ப்புணர்ச்சி கொண்ட சில பேரின் குறுக்கீட்டினால் விருது மறுபரிசீலனை என அறிவிக்கப்பட்டதாய் அறிகிறேன். இத்தகைய செயல்பாடுகள் என்னையும், ஓ.என்.வி குரூப்பையும் சிறுமைப்படுத்துவதாகுமோ சிந்தையழிகிறேன். 

சர்ச்சைக்களுக்கு இடையே இந்த விருதை பெறுவதை நான் தவிர்க்கவே விரும்புகிறேன். எனக்கு அறிவிக்கப்பட்ட பரிசுத் தொகை ரூ.3 லட்சத்தை கேரள முதல்வரின் நிதியில் சேர்க்க வேண்டுகிறேன். எனது சொந்த பணத்தில் இருந்து ரூ. 2 லட்சத்தை கேரள முதல்வரின் நிதிக்கு வழங்குகிறேன் என்று கவிஞர்  வைரமுத்து தெரிவித்துள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து