முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உலக தர வரிசை பட்டியலில் 3 இந்திய பல்கலைக்கழகங்களுக்கு இடம்

வியாழக்கிழமை, 10 ஜூன் 2021      இந்தியா
Image Unavailable

Source: provided

புதுடெல்லி  : உலக பல்கலைக்கழக தர வரிசைப்பட்டியலில் முதல் 200 இடங்களில் 3 இந்திய பல்கலைக்கழகங்கள் இடம்பிடித்து சாதனை படைத்துள்ளது.

உலக பல்கலைக்கழக தர வரிசைப் பட்டியல் 2022-ல், 3 இந்திய பல்கலைக்கழகங்கள் இடம் பிடித்துள்ளன. ஆராய்ச்சி பிரிவில், உலகளவில் முதலாவது இடத்தில் பெங்களூர் ஐ.ஐ.எஸ்.சி. உள்ளது.

உலகளவில் உயர்கல்வி குறித்து கியூ.எஸ் (குவாக்கரெல்லி சைமண்ட்ஸ்) என்ற அமைப்பு ஆய்வு செய்து தர வரிசைப் பட்டியலை ஒவ்வொரு ஆண்டும் வெளியிட்டு வருகிறது. இந்த அமைப்பு தனது 18-வது சர்வதேச பல்கலைக்கழக தர வரிசைப்பட்டியலை நேற்று வெளியிட்டது.

இதில் மும்பை ஐ.ஐ.டி. 177-வது இடத்தையும், டெல்லி ஐ.ஐ.டி. 185-வது இடத்தையும், பெங்களூரு ஐ.ஐ.எஸ்.சி. 186-வது இடத்தையும் பிடித்துள்ளன. இதற்கு மத்திய கல்வி அமைச்சர்  ரமேஷ் பொக்ரியால் பாராட்டு தெரிவித்துள்ளார்.

இது குறித்து அமைச்சர் பொக்கிரியால் கூறியதாவது:

கல்வி மற்றும் ஆராய்ச்சியில் இந்தியா முன்னோக்கி சென்று விஷ்வகுருவாக மாறி வருகிறது. இந்திய கல்வித்துறையுடன் தொடர்புடைய மாணவர்கள், பேராசிரியர்கள் மற்றும் இதர தரப்பினர் பற்றி பிரதமர் நரேந்திர மோடி எப்போதும் எண்ணி செயலாற்றிக் கொண்டிருக்கிறார். 

தேசிய கல்விக்கொள்கை 2020 போன்ற முயற்சிகள் தான், நமது கல்லூரிகள் மற்றும் உயர்கல்வி மையங்களை சர்வதேச அளவில் இடம்பெற செய்கின்றன. இதை க்யூ.எஸ் மற்றும் டைம்ஸ் குரூப் வெளியிட்டுள்ள பல்கலைக் கழகங்களின் தரவரிசைப்பட்டியலை பார்த்து உணர முடியும். இவ்வாறு அவர் கூறினார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து