முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

துருக்கியை வீழ்த்தியது இத்தாலி

சனிக்கிழமை, 12 ஜூன் 2021      விளையாட்டு
Image Unavailable

Source: provided

ஐரோப்பிய கோப்பை கால்பந்து போட்டியில் மொத்தம் 24 நாடுகள் பங்கேற்கின்றன. அவை 6 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன.இத்தாலியின் ரோம் நகரில் தொடங்கிய முதல் லீக் ஆட்டத்தில் குரூப் ஏ பிரிவில் இடம்பிடித்துள்ள துருக்கி, இத்தாலி அணிகள் மோதின. ஆட்டம் தொடங்கியது முதல் இரு அணிகளும் ஆக்ரோஷமாக ஆடின. இதனால் முதல் பாதியில் எந்த அணியும் கோல் அடிக்கவில்லை. இரண்டாவது பாதியில் துருக்கி வீரர் 53-வது நிமிடத்தில் ஓன் கோல் அடித்தார். 

இதையடுத்து இத்தாலி அணி தனது அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இம்மொபைல் 66-வது நிமிடத்திலும், இன்சிக்னே 79-வது நிமிடத்திலும் தலா ஒரு கோல் அடித்தனர். துருக்கி அணியால் பதிலுக்கு ஒரு கோல் கூட அடிக்க முடியவில்லை. இறுதியில், இத்தாலி அணி 3-0 என்ற கோல் கணக்கில் துருக்கியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.

___________

சிட்சிபாஸ் இறுதிக்கு முன்னேற்றம்

பிரெஞ்சு-ஓபன் டென்னிஸ் தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் அரையிறுதி ஆட்டம் ஒன்றில் கிரீசை சேர்ந்த ஸ்டெபனோஸ்-சிட்சிபாஸ், 6-ம் நிலை வீரரான ஜெர்மனியை சேர்ந்த அலெக்சாண்டர் ஸ்வெரேவை சந்தித்தார். முதல் இரு செட்களை சிட்சிபாஸ் 6-3, 6-3 என கைப்பற்றினார். இதையடுத்து, அதிரடியாக ஆடிய ஸ்வெரேவ் அடுத்த இரு செட்களை 6-4, 6-4 என கைப்பற்றி பதிலடி கொடுத்தார்.

வெற்றியாளரை நிர்ணயிக்கும் ஐந்தாவது செட்டில் சிறப்பாக ஆடிய சிட்சிபாஸ் 6-3 என கைப்பற்றி அசத்தினார். இறுதியில், ஸ்டெபனோஸ்-சிட்சிபாஸ் 6-3, 6-3, 4-6, 4-6, 6-3 என்ற செட் கணக்கில் ஸ்வெரேவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். இந்தப் போட்டி 3 மணி நேரம் 37 நிமிடங்கள் நீடித்தது.  22 வயதாகும் ஸ்டெபனோஸ்-சிட்சிபாஸ் பிரெஞ்சு ஓபன் இறுதிப்போட்டிக்கு முன்னேறுவது முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது. இன்று நடைபெறும் இறுதியில் சிட்சிபாஸ் நடால் அல்லது ஜோகோவிச்சுடன் மோதுகிறார்.

_____________

மன்னிப்பு கோரினார் ஷாகிப் 

வங்காள தேசத்தில் நடைபெற்றுவரும்  டிபிஎல் எனப்படும் டாக்கா பிரீமியர் லீக் போட்டியில் எம்எஸ்சி அணியின் கேப்டனாக இருந்து வருகிறார்  ஷாகிப் அல் ஹசன். அபாஹனி லிமிடெட் அணிக்கு எதிரான ஆட்டத்தில் ஷகில் அல் ஹசன் பந்துவீசினார். 

பேட்ஸ்மேன் முஷ்ஃபிகுர் ரஹிமை எல்பிடபிள்யூ முறையில் ஆட்டமிழக்க கள நடுவரிடம் அப்பீல் செய்தார். ஆனால் அவுட் கொடுக்க நடுவர் மறுத்துவிட்டார். இதனால் கோபம் கொண்ட ஷாகிப், உடனடியாக நடுவர் அருகே இருந்த ஸ்டம்புகளைக் காலால் எட்டி உதைத்து நடுவரிடம் இதுகுறித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதுபோல் மற்றொரு முறையும் தனது கோபத்தை இன்னும் தீவிரமாக வெளிப்படுத்தினார். இதைதொடர்ந்து ஷாகிப் மன்னிப்பு தெரிவித்து ஃபேஸ்புக்கில் பதிவு வெளியிட்டு உள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து